காங்கேயம் யூனியன் மரவபாளையம், கீரனுார், பரஞ்சேர்வழி, நத்தக்காடையூர், மருதுறை, பழையகோட்டை பஞ்., பகுதிகளில், 2.95 கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சி திட்டப்பணிகளை, செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், பூஜை செய்து நேற்று துவக்கி வைத்தார்.
இதன்படி மரவபாளையம் பஞ்.,ல், 20.89 லட்சம் ரூபாய் மதிப்பில்; பரஞ்சேர்வழி பஞ்.,ல், 91.34 லட்சம் ரூபாய் மதிப்பில்; நத்தக்காடையூர் பஞ்.,ல், 43.10 லட்சம் ரூபாய் மதிப்பில்; பழையகோட்டை பஞ்.,ல், 32.69 லட்சம் ரூபாய்; கீரனுார் பஞ்.,ல், 20.89 லட்சம் ரூபாய்; மருதுறை பஞ்.,ல், 32.41 லட்சம் ரூபாய் என, ௨.95 கோடி ரூபாய் மதிப்பில், பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணி நடக்கிறது.
நிகழ்ச்சியில் காங்கேயம் சேர்மன் மகேஷ்குமார், துணை சேர்மன் ஜீவிதா ஜவஹர், காங்கேயம் வடக்கு ஒன்றிய தி.மு.க., செயலாளர் சிதம்பரம், பஞ்., தலைவர்கள், யூனியன் கவுன்சிலர்கள், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.