உளுந்தூர்பேட்டை - சேலம் புறவழிச்சாலை: 4 வழியாக அகலப்படுத்தும் பணி துவக்கம் நமது நிருபர்
Added : ஜூலை 02, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 


ளுந்துார்பேட்டை - சேலம் சாலையில், கோர விபத்துகள் நிகழ்ந்து பல உயிரிழப்புகளுக்கு காரணமாக இருந்த அகலம் குறைந்த அனைத்து புறவழிச்
சாலைகளும் நான்கு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி துவங்கி
யுள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்துார்பேட்டை - சேலம் வரையிலான, 136.357 கி.மீ., சாலை, 2008ம் ஆண்டு ஜூலை மாதம், 941 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணி துவங்கியது.

பல்வேறு சிக்கல்களால், 4 ஆண்டுகளுக்குப்பின் பணிகள் முடிந்து, 2012ம் ஆண்டு முதல், படிப்படியாக போக்குவரத்து துவங்கியது. 2013ல் நான்கு வழிச்சாலை பயன்பாட்டிற்கு வந்தது.
உளுந்துார்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாகதுருகம், கள்ளக்குறிச்சி, சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி ஆகிய 8 இடங்களில் புற
வழிச்சாலை அமைக்கப்பட்டது.
அந்த சமயத்தில் வாகன போக்குவரத்து குறைவாக இருப்பதாகக் கூறி புறவழிச் சாலைகள் அனைத்தும் இரு வழிச்சாலையாக அமைக்கப்பட்டது.
இருப்பினும், குறிப்பிட்ட மேம்பாலங்களின் கட்டுமானப் பணிகள் மட்டும் வரும் காலங்களில் 4 வழிச்சாலை அமைப்பதற்கேற்ப அகலமாக கட்டி முடிக்கப்பட்டது.
ஆறுகள் குறுக்கிடும் கள்ளக்
குறிச்சி, ஆத்துார், வாழப்பாடி ஆகிய புறவழிச்சாலையில், இரு வழிப்பாதைக்கான பாலம் மட்டுமே உள்ளதால் நான்கு வழிச்சாலை அமைக்கும் போது மற்றொரு புதிய பாலம் அருகில் அமைக்க வேண்டும்.
உயிர் பலி அதிகம்
சென்னை, சேலம், ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட முக்கிய தொழில் பெரு நகரங்களை இணைக்கும் பிரதான சாலையாக உளுந்துார்பேட்டை - சேலம் சாலையில், நாள்தோறும் பல்லாயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது.
நான்கு வழிச்சாலைகளில் 120 கி.மீ., வேகத்திலும், புறவழிச்சாலையில் 60 கி.மீ., வேகத்தில் வாகனங்கள் செல்லும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.
நான்கு வழிச்சாலையில் அசுர வேகத்தில் செல்லும் வாகன ஓட்டிகள், அதே வேகத்தில் அகலம் குறைந்த புறவழிச் சாலையில் நுழையும் போது திடீரென ஒரே சாலையில் எதிரே வரும் வாகனங்களால், குழப்பம் அடைந்து விபத்துகள் ஏற்படுகிறது.
கள்ளக்குறிச்சி புறவழிச்
சாலையில் 2019 ஜூலை 16ம் தேதி இரவு ஆம்னி பஸ் பிக்கப் வேன் மோதிய விபத்தில், 11 பேர் மற்றும் தியாகதுருகம், ஆத்துார், வாழப்பாடியில் 3 பேர் என கொத்துக் கொத்தாகவும் உயிர் பலி ஏற்பட்டுள்ளது.
அதேபோல், கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 29ம் தேதி தியாகதுருகம் புறவழிச்சாலை அருகே கார் மீது அரசு பஸ் மோதிய கோர விபத்தில், ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் இறந்தனர்.
வலுத்தது கோரிக்கை
இதுபோன்ற விபத்துகளால் ஏற்பட்ட அதிர்வலைக்குப்பின், இரு வழிச் புறவழிச்சாலைகள் அனைத்தையும் நான்கு வழிச் சாலையாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை வலுக்கத்
துவங்கியது.
உளுந்துார்பேட்டை - சேலம் இடையே உள்ள 8 புறவழிச் சாலைகளின் மொத்த துாரம், 37.892 கி.மீ., ஆகும். இவற்றின் அகலம் குறைக்கப்பட்டதே, இவ்வழித்தடத்தில் விபத்துகள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக இருந்தது.
புறவழிச்சாலையை உடனடியாக அகலப்படுத்தினால் மட்டுமே பாதுகாப்பான பயணத்திற்கு வழிவகுக்கும் என 'காலைக்கதிர்' நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது.
இதனையடுத்து, இரு வழிச்சாலையாக உள்ள புறவழிச் சாலைகள் தற்போது நான்கு வழிச்சாலையாக மாற்றுவதற்கான பணிகளை, 'நகாய்' அதிகாரிகள் 10 ஆண்டு
களுக்கு பின் துவங்கியுள்ளனர்.
முதல் கட்டமாக கள்ளக்குறிச்சி - உளுந்துார்பேட்டை இடையே உள்ள உளுந்துார்பேட்பேட்டை, எலவனாசூர்கோட்டை, தியாக
துருகம், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 9 கி.மீ., தொலைவிலான 4 புறவழிச் சாலைகள் 56 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு வழிச்
சாலையாக மாற்றும் பணி துவங்கி
யுள்ளது.
சிக்கல் இல்லை
இதனைத் தொடர்ந்து, மீதமுள்ள சின்னசேலம், சேலம் மாவட்டம் ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி உள்ளிட்ட 27 கி.மீ., தொலைவிலான 4 புற
வழிச்சாலைகளும் அகலப்படுத்தும் பணிகள் அடுத்தடுத்து துவங்கப்பட உள்ளது.
புறவழிச்சாலை அனைத்திலும் நான்கு வழிச்சாலை அமைப்பதற்கு ஏதுவாக, முன்கூட்டியே நில ஆர்ஜிதம் செய்யப்பட்டு 'நகாய்' கட்டுப்பாட்டில் உள்ளதால், தற்போது எந்த சிக்கலும் இன்றி பணிகளை தடையின்றி மேற்கொள்ள முடியும்.
ரூ.250 கோடியில் பணிகள்
புறவழிச்சாலை விரிவாக்கப்பணிகள் குறித்து நகாய் அதிகாரி ஒருவர் கூறியதாவது:
உளுந்துார்பேட்டை சேலம் இடையே நான்கு வழிச்சாலை பணிகளை ரிலையன்ஸ் நிறுவனம் மேற்கொண்டது.
இந்நிறுவனத்திடம் போடப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்
படையில், பணிகள் முடிந்து நான்கு வழிச்சாலையில் போக்குவரத்து கடந்த 2013ம் ஆண்டு துவங்கியது. அப்போது, 2024க்குள் இரு வழிச்சாலையாக உள்ள, 8 புற
வழிச்சாலைகளும், நான்கு வழிச்சாலையாக மாற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, தற்போது புறவழிச்சாலைகள் அனைத்தும் நான்கு வழிச்சாலையாக மாற்றும் பணிகளை அந்நிறுவனம் துவக்கியுள்ளது. பல்வேறு சிறு பாலங்கள் கட்டுதல் உட்பட சாலை பணி, 250 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது.
கள்ளக்குறிச்சி, தியாகதுருகம், எலவனாசூர்கோட்டை, உளுந்துார்பேட்டை புறவழிச்சாலைகள், 56 கோடி ரூபாய் மதிப்பில் மேற்கொள்ளப்படுகிறது. சின்னசேலம், ஆத்துார், வாழப்பாடி, உடையாப்பட்டி புறவழிச்சாலைகள், 194 கோடி ரூபாய் மதிப்பில் நான்கு வழிச்சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இவ்வாறு அதிகாரி கூறினார்.



தொடர்ந்து வலியுறுத்திய 'காலைக்கதிர்' நாளிதழ்


உளுந்துார்பேட்டை - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் இரு வழிச்சாலையாக உள்ள புறவழிச் சாலைகளில் ஏற்படும் விபத்துகளைத் தவிர்க்க தற்காலிகமாக சென்டர் மீடியன் அமைக்க வேண்டும் என 'காலைக்கதிர்' நாளிதழ் சுட்டிக் காட்டியது.
புறவழிச் சாலையில் ஏற்படும் விபத்துகளுக்கான காரணங்கள் மற்றும் அதனை தடுப்பதற்கு மேற்கொள்ள வேண்டிய நிரந்தர தீர்வாக புறவழிச் சாலையினை நான்கு வழிச்சாலையாக மாற்ற வேண்டும் எனவும் தொடர்ந்து 'காலைக்கதிர்' நாளிதழ் செய்தி வெளியிட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து மக்கள் பிரதிநிதிகளும் குரல் கொடுத்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X