எலும்புக்கூடாக மாறிய அரசு தேயிலை தொழிற்சாலை
Updated : ஜூலை 02, 2022 | Added : ஜூலை 02, 2022 | கருத்துகள் (5) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் சேரம்பாடி டான்டீ யில், பல லட்ச ரூபாய் லாபம் ஈட்டி தந்த தேயிலை தொழிற்சாலை, எலும்பு கூடாக மாறியது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த 1969 ல் தாயகம் திரும்பிய தமிழர்களின், மறுவாழ்வு திட்டத்திற்காக, தமிழ்நாடு அரசு தேயிலை தோட்டக்கழகம்( டான்டீ) துவக்கப்பட்டது. தேயிலை தூள் தயாரிக்க தேயிலை தொழிற்சாலைகள் கட்டப்பட்ட நிலையில், முதல் தேயிலை தொழிற்சாலையாக சேரம்பாடி டான்டீ யில், கடந்த 1984ல், அப்போதைய செய்தி மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் வீரப்பன் திறந்து வைத்தார். நல்ல நிலையில் செயல்பட்டு, மாதந்தோறும் தேயிலை தூள் மூலம் பல லட்ச ரூபாய், லாபம் ஈட்டி தந்த இந்த தொழிற்சாலை, நிர்வாகத்தின் மூலம் கடந்த 2017. ல் மூடப்பட்டது.






இங்கு பறிக்கப்படும் பசுந்தேயிலை, அருகில் உள்ள டான்டீ மற்றும் குன்னூர், கோத்தகிரி பகுதி தேயிலை தொழிற்சாலைகளுக்கு கொண்டு செல்லப்படுகிறது. பல கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தேயிலை தொழிற்சாலை, அதிகாரிகளின் அட்சியத்தினால், மூடப்பட்ட நிலையில், இயந்திரங்கள் துருப்பிடித்து நாசமடைந்தது. தளவாட பொருட்கள், இயந்திரங்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டதுடன், கட்டிட மேல்கூரையும் அகற்றப்பட்டது. இதனால் தொழிலாளர்களுக்கு வேலை வாய்ப்பும், பல கோடி ரூபாய் லாபத்தையும் ஈட்டி தந்த தேயிலை தொழிற்சாலை தற்போது, எலும்புக்கூடாக மாறி, வனவிலங்குகளின் புகலிடமாக மாறியுள்ளது. இதுபோன்ற அரசு தேயிலை தொழிசாலைகளை மூடுவதை தவிர்த்து, தொடர்ந்து செயல்படுத்திட முன்வர வேண்டும் என்று தேயிலை தொழிலை சார்ந்த விவசாயிகளும், தொழிலாளர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.





எம். எல். ஏ. ஜெயசீலன் கூறுகையில், டான்டீ நிர்வாகத்தின் பொறுப்பற்ற செயல்பாடுகளால் நல்ல நிலையில் செயல்பட்டு வரும் தொழிற்சாலைகளை மூடுவதை கைவிட வேண்டும். டான்டீயில் போதிய பசுந்தேயிலை கிடைக்காவிட்டாலும், வெளியில் தேயிலை விவசாயிகளிடம் பசுந்தேயிலை கொள்முதல் செய்து, தரமான தேயிலைத்தூளை தயாரிக்க அரசு முன்வர வேண்டும் என்றார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (5)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sutha - Chennai,இந்தியா
03-ஜூலை-202207:18:06 IST Report Abuse
Sutha அரசு நிறுவனங்களில் வேலை செய்யாமலே சம்பளம் வாங்கலாம் என்ற எண்ணத்துடன் செயல்படுபவர்களும்,ஊழல் நிர்வாகங்களும் சேர்ந்தால் இதுதான் நிலைமை.
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
02-ஜூலை-202217:48:10 IST Report Abuse
Natarajan Ramanathan யாராவது டான்டீ குடித்திருக்கிறீர்களா? ஒரே ஒருமுறை குடித்தால் அதன்பிறகு டீ குடிக்கும் ஆசையே போய்விடும்.
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
02-ஜூலை-202214:51:34 IST Report Abuse
Rpalnivelu திருட்டு த்ரவிஷர்கள் கம்மிகள் அங்கே கூடாரம் கட்டி கொள்ளை அடித்துருப்பார்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X