சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம், தொகுதி, 4ல் அடங்கிய பணிகளுக்கான தேர்வை, வரும், 24ல் நடத்த உள்ளது. அதற்காக, சேலம் மாவட்ட வேலை வாய்ப்பு, தொழில்நெறி வழிகாட்டும் மையம் சார்பில், வரும், 10, 17ல், மாதிரி தேர்வு நடக்க உள்ளது. சேலம் தியாகராஜர் பாலிடெக்னிக் கல்லுாரி வளாகத்தில், காலை, 10:00 முதல், மதியம், 1:00 மணிவரை தேர்வு நடக்கும். விருப்பமுள்ள தேர்வர்கள், https://forms.gle./83VMqsVMbK82kyNA7 என்ற, 'கூகுள் பார்ம் லிங்க்'கில் முன்பதிவு செய்து கொள்ள வேண்டும். தேர்வு நாளில் மையத்துக்கு, காலை, 8:00 முதல், 9:00 மணிக்குள், தேர்வுக்கு விண்ணப்பித்த நகல், இரு பாஸ்போர்ட் புகைப்படங்களுடன் வர வேண்டும். மாதிரி தேர்வு தொடர்பான விபரம் பெற, 0427 - 2401750 என்ற எண்ணில் பேசலாம்.