தண்டராம்பட்டு:தண்டராம்பட்டு அருகே, மாயமான பஞ்., தலைவரை கண்டுபிடித்து தரக்கோரி, போலீசில் அவரது மனைவி புகார் அளித்துள்ளார்.
திருவண்ணாமலை மாவட்டம், தண்டராம்பட்டு அடுத்த கீழ்வணக்கம்பாடி பஞ்., தலைவர் குமார், 42; பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்தவர்.இவர், கடந்த, 22ல் பி.டி.ஓ., அலுவலகத்தில் நடந்த ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். பின், அவரை, பஞ்., துணைத் தலைவர் வரதன், 28, மற்றும் அவரது தந்தையான 'மாஜி' பஞ்., தலைவர் பூபதி ஆகியோர், பணிகளை சரியாக செய்யவில்லை என, தகாத வார்த்தையால் பேசியுள்ளனர்.
இதனால் மனவேதனையில் இருந்த குமார், கடந்த, 28ல் திடீரென மாயமானார்.இது குறித்து, அவரது மனைவி அஞ்சலா, தண்ட ராம்பட்டு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.