சோழவரம்:புகைப்பதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்த இளைஞர்கள் மீது போலீசார் வழக்கு பதிந்து, எச்சரிக்கை செய்து அனுப்பினர்.
கஞ்சா விற்பனையை தடுக்கும் வகையில் சோழவரம் காவல் நிலைய தனிப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு, அருமந்தை பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.அங்குள்ள சுடுகாட்டில், இளைஞர்கள் இருப்பதை கண்டு, அங்கு சென்று அவர்களை பிடித்து விசாரித்தனர். அவர்களிடம், 40 கிராம் கஞ்சா பொட்டலங்களும் இருந்தன.விசாரணையில் அவர்கள், அருமந்தை ராஜா, 20, பாடியநல்லுார் சபரி, 23, சோழவரம் அபினாஷ், 21, என்பதும், கூரியர் மற்றும் மீன் மார்க்கெட்டில் இவர்கள் வேலை செய்து வந்ததும் தெரிந்தது.
கஞ்சா போதைக்கு அடியான இவர்கள், அதை புகைப்பதற்கு சுடுகாடு பகுதிக்கு வந்ததும் தெரிந்தது.போலீசார் மூன்று போரையும் காவல் நிலையம் அழைத்து சென்று, அவர்கள் மீது வழக்கு பதிந்து, பின், காவல் நிலைய பிணையில் அவர்களை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர்.