ஓய்வூதியர்களின் நலனை கருத்தில் கொண்டு, ஜீவன் பிரமான் இணையதளத்தினை பயன் படுத்தி, இந்திய அஞ்சல் துறை வங்கியின் சேவையின் மூலமாக ஓய்வூதியர்கள் தங்களது இருப்பிடத்திலிருந்தபடியே தபால்துறை பணியாளர் மூலமாக, 70 ரூபாய் கட்டணம் செலுத்தி மின்னணு வாழ்நாள் பதிவு செய்து கொள்ளலாம்.
அரசு இ- - சேவை மற்றும் பொது சேவை மையங்களின் வாயிலாகவும், மின்னணு வாழ்நாள் சான்றிதழ் பதிவு செய்து ஆண்டு நேர்காணல் செய்து கொள்ளலாம்.மேலும், ஓய்வூதியதாரர்கள் தங்களது விருப்பத்தின்படி, நேரடி நேர்காணலுக்கு ஓய்வூதிய புத்தகத்துடன் குறிப்பிட்ட மாதங்களில் ஏதேனும் ஒரு அரசு வேலை நாட்களில் செல்லலாம்.இவ்வாறு கலெக்டர் பேசினார்.
நிகழ்ச்சியில், திருவள்ளுர் மாவட்ட சப் கலெக்டர் மகாபாரதி, மாவட்ட கருவூல அலுவலர் வித்யா கவுரி, கூடுதல் கருவூல அலுவலர் மோகன் உட்பட பலர் பங்கேற்றனர்.