ஆரணி:ஆரணியில், பிரபல உணவகத்தில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்
.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காந்தி ரோட்டில், 'நியூ 5 ஸ்டார்' என்ற பிரபல பிரியாணி கடை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மதியம், ஆரணி அடுத்த நேத்தமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி, 40, மனைவி ஜான்சிராணியுடன் உணவருந்த சென்றார். அவர்கள், சிக்கன் 65, வஞ்சரம் மீன், சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். \
அப்போது, ஜான்சி ராணி சாப்பிட்ட மட்டன் பிரியாணியில், கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. கடந்த மாதம், இதே ஹோட்டலில், தந்துாரி சிக்கன் சாப்பிட்ட, பள்ளி மாணவர் பலியானது குறிப்பிடத்தக்கது.