மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சியால் பீதி | திருவண்ணாமலை செய்திகள் | Dinamalar
மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சியால் பீதி
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
Latest district News

ஆரணி:ஆரணியில், பிரபல உணவகத்தில் மட்டன் பிரியாணியில் கரப்பான் பூச்சி இருந்ததால், வாடிக்கையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர்
.திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி காந்தி ரோட்டில், 'நியூ 5 ஸ்டார்' என்ற பிரபல பிரியாணி கடை உள்ளது. இங்கு, நேற்று முன்தினம் மதியம், ஆரணி அடுத்த நேத்தமங்கலத்தைச் சேர்ந்த மூர்த்தி, 40, மனைவி ஜான்சிராணியுடன் உணவருந்த சென்றார். அவர்கள், சிக்கன் 65, வஞ்சரம் மீன், சிக்கன் மற்றும் மட்டன் பிரியாணி வாங்கி சாப்பிட்டனர். \
அப்போது, ஜான்சி ராணி சாப்பிட்ட மட்டன் பிரியாணியில், கரப்பான் பூச்சி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து, ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தார்.இது தொடர்பான வீடியோ பரவி வருகிறது. கடந்த மாதம், இதே ஹோட்டலில், தந்துாரி சிக்கன் சாப்பிட்ட, பள்ளி மாணவர் பலியானது குறிப்பிடத்தக்கது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் வேலூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X