வங்கி மேலாளர் தற்கொலை | திருநெல்வேலி செய்திகள் | Dinamalar
வங்கி மேலாளர் தற்கொலை
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 

திருநெல்வேலி:திருநெல்வேலியில் இருந்து முதுகுளத்தூருக்கு டிரான்ஸ்பர் செய்யப்பட்ட கனரா வங்கி மேலாளர் முருகேசன் 52, தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருநெல்வேலி மாவட்டம் மூலைக்கரைப்பட்டி கனரா வங்கியில் மேலாளராக பணியாற்றியவர் முருகேசன் 52. இவரது மனைவி அங்கு அரசு பள்ளி ஆசிரியையாக உள்ளார். இவர்களது மகள் திருநெல்வேலியில் பிளஸ் டூ பயில்கிறார். மூலைக்கரைப்பட்டி கிளையில் 3 ஆண்டுகள் பணியை நிறைவு செய்ததால் அவரை தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிளைக்கு மாற்றினர்.

முருகேசன் மகள் பிளஸ் 2 படிப்பதால் இந்த ஒரு ஆண்டு மட்டும் மூலைக்கரைப்பட்டியில் தொடர அனுமதி கேட்டார். ஆனால் அவரை கோவில்பட்டிக்கு பதில் ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் கிளைக்கு மாற்றினர். 15 நாட்களாக பணிக்கு செல்லாததால் வங்கி நிர்வாகம் அவர் மீது நடவடிக்கை எடுத்தது. நேற்று பெருமாள்புரத்தில் உள்ள வீட்டு மாடியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் விசாரித்தனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருநெல்வேலி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X