ஈரோடு:ஈரோடில், போலி ஆதார் அட்டை தயாரித்து, ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை அபகரிப்பு செய்த முதியவரை, போலீசார் கைது செய்தனர்.
இவர், ஆதார் அட்டையில் தந்தை பெயர் மற்றும் இன்ஷியலை மாற்றி, ஈரோடு சார் - பதிவாளர் அலுவலகத்தில், சித்தையன் - சந்திரகலா பெயரில், 2020ல் கிரயம் செய்துள்ளார். இந்நிலையில், கண்ணன் தன் நிலம் குறித்து, வில்லங்கம் பார்த்தபோது இது தெரிந்தது. அதன் பின் புகார் அளித்தார்.
விசாரணையில் சித்தையன் - சந்திரகலா உள்ளிட்ட ஏழு பேர், ஆள் மாறாட்டம் செய்து நிலத்தை கிரயம் செய்ததை கண்டுபிடித்தோம்.நிலத்தை அபகரித்த வழக்கில் மூளையாக செயல்பட்ட மூர்த்தி, நேற்று கைது செய்யப்பட்டார். மற்ற ஐந்து பேரும், முன் ஜாமின் பெற்றுள்ளனர்.இவ்வாறு போலீசார் கூறினர்.