இந்நிலையில், வரும் 9ம் தேதி அல்லது அடுத்த சில நாட்களில் திருவண்ணாமலையில் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வருகை தர உள்ளார்.இதற்கான ஏற்பாடுகள் குறித்து கடந்த மாதம் திருவண்ணாமலையில் நடந்த உயர் அதிகாரிகள் பங்கேற்ற ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் மாநில நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் வேலு, திண்டிவனத்தில் இருந்து செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு முதல்வர் வருவதால் சாலை விரிவாக்கப் பணியை விரைவாக செய்ய உத்தரவிட்டார்.
அதன்படி இரவு, பகலாக இடைவிடாமல் சாலை விரிவாக்கப் பணிகள் நடக்கிறது.திண்டிவனம் முதல் கிருஷ்ணகிரி வரையிலான பணியை, தற்போது திருவண்ணாமலை வரை மட்டுமே விரைவுபடுத்தியுள்ளனர். அடுத்துள்ள பகுதியில் பணிகள் மந்த கதியிலேயே நடக்கிறது.இந்த பணிகளையும் துரிதப்படுத்த அமைச்சர் வேலு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
சாலை விரிவாக்கப் பணியில் நகர பகுதிகள் இணைக்கவில்லை. இதனால் நகர சாலைகள் குண்டும் குழியுமாக இருந்தன. சில மாதங்களுக்கு முன் வரை நகாய் வசம் இருந்த நகர பகுதிகளை, தற்போது தேசிய நெடுஞ்சாலைத் துறையிடம் ஓப்படைத்துள்ளனர். இந்த சாலைகளும் டெண்டர் வைத்து புதுப்பிக்கும் பணி தற்போது நடந்து வருகிறது.
திண்டிவனம் முதல் செஞ்சி வரை சாலை போட்டு முடிந்த இடங்களில் சாலையின் மத்தியிலும், சாலை ஓரத்தில் 1 மீட்டர் இடைவெளியில் வெள்ளை பெயிண்ட் அடித்து வருகின்றனர்.பல இடங்களில் சாலையோரத்தில் 4 அடி வரை சாலையில் நீட்டிக்கொண்டு மரம், முட்செடிகள் வளர்ந்துள்ளன. அதை அகற்றாமல் அப்படியே வெள்ளைக் கோடு அடித்துள்ளனர். முட்செடிகள் இரவு நேரத்தில் வெள்ளை கோட்டுக்கு வெளியே செல்லும் இரு சக்கர வாகன ஓட்டிகளின் கண்களை பதம் பார்க்கும் அபாயம் உள்ளது.