தமிழகத்தில் கடற்பகுதி அச்சுறுத்தல் இல்லை
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

நாகர்கோவில்,;''தமிழக கடற்பகுதியில் அச்சுறுத்தல் எதுவும் இல்லை'' என்று கடலோர பாதுகாப்பு மண்டல எஸ்.பி. சுந்தரவடிவேலு கூறினார். கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவலை தடுக்க கடலோர பாதுகாப்பு குழும போலீசாரும் உள்ளூர் சட்டம் ஒழுங்கு போலீசாரும் இணைந்து நடத்திய 'சாகர் கவாச்' என்னும் கடல் பாதுகாப்பு ஒத்திகையை ஆய்வு செய்தனர்.


இதனை ஆய்வு செய்த சுந்தரவடிவேலு கூறியதாவது:தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்கள் அடங்கிய ராமநாதபுரம் மண்டலத்தில் 53 கடலோர பாதுகாப்பு குழும சோதனைச் சாவடிகள், 22 கடலோர காவல் நிலையங்கள் செயல்படுகின்றன. பதினாறு அதிநவீன படகுகளும், நீரிலும் நிலத்திலும் இயங்கும் 15 படகுகளும் பாதுகாப்பு பணிகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. சொந்தப் படகுகள் இல்லாத பகுதிகளில் மீனவர்களின் படகுகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகிறோம்.கன்னியாகுமரியில் பாதுகாப்பு பணிகளுக்காக 54 அதிநவீன படகுகள் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடல் வழியாக ஊடுருவலை கண்காணிக்கவும் ஆபத்துக் காலங்களில் மீனவர்களுக்கு உதவியும் வருகிறோம். தெற்கு மண்டலத்தில் 350 முதல் 400 காவலர்கள் இப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். கடலோர பாதுகாப்பு குழுமத்திற்கு உதவும் வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 48 கிராமங்களில் இளைஞர்களைத் தேர்வு செய்து கிராம விழிப்புணர்வு கூட்டங்களை நடத்தி வருகிறோம். அவர்களின் தொழில் மேம்பாட்டிற்கு உதவுவதோடு சந்தேகப்படும் வகையில் யாரேனும் கடற்பகுதிகளில் ஊடுருவினால் அரசுக்கு தகவல் தரும் வகையில் அவர்களை பயிற்சி அளித்து வருகிறோம்.
தமிழகத்தின் கடற்பகுதியில் வழியாக எவ்விதமான அச்சுறுத்தலும் இல்லை. சுற்றுலா தலமாக விளங்கும் கடலோரப் பகுதிகளில் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் கடலோர பாதுகாப்பு போலீசார் ரோந்து பணியில் ஈடுபடுவார்கள். கடல்வாழ் உயிரினங்களைப் பாதுகாக்கவும் கடற்கரை பகுதிகளை சுகாதாரமாக பேண வலியுறுத்தவும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் நாகர்கோவில் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X