இடுக்கியில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த ஆர்வம் குறைவு
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

மூணாறு : இடுக்கி மாவட்டத்தில் கொரோனா பூஸ்டர் தடுப்பூசி செலுத்த மக்கள் ஆர்வம் இன்றி உள்ளனர்.கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்தியவர்களுக்கு 9 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்தப்படுகிறது. 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார துறை ஊழியர்கள், முன் களப்பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் செலுத்தப்படுகிறது.

இருப்பினும் அவர்கள் பூஸ்டர் செலுத்த முன்வருவதில்லை.60 வயதுக்கு மேற்பட்ட 1,45,127 பேரில் 31,141 பேர் மட்டும் பூஸ்டர் செலுத்திக்கொண்டனர். இது 21 சதவீதமாகும். சுகாதார துறையில் பூஸ்டர் டோஸ் செலுத்த வேண்டிய 12,580 பேரில் 6095 பேர் மட்டும் செலுத்தியுள்ளனர். இது 48 சதவீதமாகும். முன் களப்பணியாளர்கள் 20,477 பேரில் 5741 பேர் மட்டும் செலுத்தியுள்ளனர்.

இது 28 சதவீதமாகும.18 வயது முதல் 59 வயது வரை தனியார் மருத்துவமனைகளில் கட்டண முறையில் பூஸ்டர் செலுத்திக் கொள்ள வேண்டும். அதற்கான வசதி ஒரு சில மருத்துவமனைகளில் மட்டும் உள்ளது. அதனால் பூஸ்டர் செலுத்திக் கொள்ள பலரும் முன்வராத நிலையில் நீண்ட தூரம் பயணம், கட்டணம் ஆகியவற்றால் பலர் தவிர்த்து வருகின்றனர். பூஸ்டர் டோஸ் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, அதனைஅனைவருக்கும் இலவசமாக செலுத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X