நீர்வரத்து கால்வாய் துார்வார வலியுறுத்தல் | தேனி செய்திகள் | Dinamalar
நீர்வரத்து கால்வாய் துார்வார வலியுறுத்தல்
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 


ஆண்டிபட்டி : ஜி.உசிலம்பட்டி ஊராட்சி ராமலிங்கபுரத்தில் நீர் வரத்து கால்வாயை தூர்வார ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். வண்ணான் குளத்திலிருந்து வரும் நீர் வரத்து கால்வாய் தொட்டராயர் சுவாமி கோயில் குளத்தில் சேர்கிறது. கடந்த பல ஆண்டுகளாக இந்த நீர்வரத்து கால்வாய் தூர்வாரப்படவில்லை. பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது.

குப்பை குவிந்து மேடு பள்ளங்களுடன் உள்ள நீர் வரத்து கால்வாயில் மழைக்காலத்தில் வரும் நீர் திசை மாறி சென்று வீணாகிறது. நீர்வரத்து கால்வாயை தூர்வாரி வீணாகும் நீரை கோயில் குளத்தில் தேக்குவதற்கு ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X