சேலம்,-நாட்டின், 75வது சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, சேலம் மாவட்டத்தில், '166 அமிர்த்த குளம்' உருவாக்கப்படுகிறது. அதற்காக நீர் ஆதாரம், நீர் பிடிப்பு பகுதி கண்டறியப்பட்டு, தலா ஒரு ஏக்கரில் குளம் நிறுவப்படுகிறது. இல்லாதபட்சத்தில் ஏற்கனவே குளம் இருந்து பராமரிப்பின்றி கிடந்தால் அதையும் ஒரு ஏக்கர் விஸ்தரிப்பில் புனரமைத்து அமைக்கப்படுகிறது. அதன்படி, புதிதாக, 94, புனரமைப்பு மூலம், 72 என, 166 அமிர்த்த குளம் அமைத்து நீலத்தடி நீர் சேமிப்புடன், மரக்கன்றுகள் நட்டு அழகுப்படுத்தப்படும். மக்கள், அரசு சாரா நிறுவனங்கள், குளம் அமைக்க முன் வரலாம் என, அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.கருணாநிதி அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில், 23, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில், 12, மீதி குளங்கள், 100 நாள் வேலை திட்டத்தில் செயல்படுத்தப்படுகிறது. இதுகுறித்து, மாவட்ட வளர்ச்சிப்பணிகள் கூடுதல் ஆட்சியர் பாலச்சந்தர் கூறுகையில், ''முதல் கட்டமாக, 3 அமிர்த்த குளம் கட்டுமானப்பணி நடக்கிறது. விரைவில், 35 குளம் கட்டுமானம், தொடங்கப்படும். பல்வேறு துறை ஒருங்கிணைப்பில், ஆக., 15க்குள், 166 அமிர்த்த குளம் பயன்பாட்டுக்கு கொண்டு வர, பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன,'' என்றார்.எங்கெங்கே குளம்?பெத்தநாயக்கன்பாளையம், 21, தலைவாசல், 20, ஓமலுார், 15, ஆத்துார், காடையாம்பட்டி, தாரமங்கலம் தலா, 10, அயோத்தியாப்பட்டணம், 9, மேச்சேரி, 8, கெங்கவல்லி, மகுடஞ்சாவடி, சங்ககிரி, வாழப்பாடி, வீரபாண்டி தலா, 7, இடைப்பாடி, பனமரத்துப்பட்டி தலா, 6, கொங்கணாபுரம், 5, நங்கவள்ளி, 4, கொளத்துார், 3, சேலம், ஏற்காடு தலா, 2 என, சேலம் மாவட்டத்தில், 166 அமிர்த்த குளங்கள் அமைக்கப்படும்.