சேலம்,-சேலம் கலெக்டர் கார்மேகம் வெளியிட்டுள்ள அறிக்கை:மாவட்டத்தில் சேலம்(மகளிர்), மேட்டூர், கருமந்துறை(எஸ்.டி.,) மற்றும் 10 தனியார் தொழிற்பயிற்சி நிலையத்தில், அரசு ஒதுக்கீட்டில், 2022 - 23ல் சேர்க்கைக்கான இணைய வழி விண்ணப்பங்களை, www.skilltraining.tn.gov.in என்ற முகவரிக்கு அனுப்பலாம்.தொழிற்பயிற்சி நிலையத்தில், ஈராண்டு, ஓராண்டு தொழிற்பிரிவுகளில் சேர, 8 அல்லது 10ம் வகுப்பு தேர்ச்சி அவசியம். தகுதியான மாணவ, மாணவியர், உரிய சான்றிதழ்களுடன், 50 ரூபாய் கட்டணத்தை இணைய வழியில் செலுத்தி, வரும், 20க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.தொழிற்பயிற்சியில் சேருபவருக்கு, அரசின் சலுகைகளான விலையில்லா மடிக்கணினி, சைக்கிள், காலணி, சீருடை, புத்தகங்கள், பஸ் வசதி, விடுதி வசதிகள், 750 ரூபாய் உதவித்தொகை அனைத்து பிரிவினருக்கும் உண்டு.விண்ணப்பிக்க, 'சேர்க்கை உதவி மையம், சேலம் மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசு தொழிற்பயிற்சி நிலையம் வளாகம், சேலம் - 7 என்ற முகவரியிலும், அனைத்து அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களை நேரிலும் அணுகி பயன்பெறலாம்.