திருமணிமுத்தாறு 2 ஆண்டில் மீட்டெடுக்கப்படும்
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

சேலம்,-''திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க இன்னும், 2 ஆண்டாகும். அவை முழுமையாக சுத்தப்படுத்தப்படும்,'' என, சுற்றுச்சூழல் அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்தார்.சேலம், உத்தமசோழபுரம் அருகே திருமணிமுத்தாறு பகுதியில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், நேற்று ஆய்வு செய்தார். தொடர்ந்து அவர் கூறியதாவது:தமிழகத்தில் ஆறு, நதி உள்ளிட்ட நீர்நிலைகளை மீட்டெடுக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி திருமணிமுத்தாற்றை பார்த்தபோது வேதனையாக உள்ளது. மாநகராட்சி கழிவுநீர், சாயக்கழிவு கலப்பதால் திருமணிமுத்தாறு மாசடைந்து அதில் ஆக்சிஜன் குறைந்துவிட்டதால், எந்த உயிரினமும் வாழ முடியாது. கரையோர மக்களும் பாதிக்கப்பட்டு, நிலத்தடி நீரும் மாசடைந்துள்ளது.மாநகராட்சிக்கு சொந்தமான, 98 எம்.எல்.டி., திறன் கொண்ட சுத்திகரிப்பு நிலையத்தில், 30 சதவீதம் மட்டும் செயல்படுகிறது. மீதி, 2 பிளான்ட் இன்னும், 3 மாதத்தில் இயங்க நடவடிக்கை எடுக்கப்படும். அத்துடன் கூடுதலாக, 3 பிளான்ட் அமைக்கவும், அதை சோலார் மின்சாரம் மூலம் இயக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. சேலத்தில் பாதாள சாக்கடை திட்ட பணிக்கு, 530 கோடி ரூபாய் ஒதுக்கி பணி நடக்கிறது.திருமணிமுத்தாற்றை மீட்டெடுக்க, இன்னும், 2 ஆண்டாகும். அவை முழுமையாக சுத்தப்படுத்தப்படும். கூடுதல் அதிகாரிகளை நியமித்து கழிவு கலப்பதை கண்காணித்து தடுப்பதோடு, அதற்கு நிரந்தர தீர்வு காணப்படும். சாய ஆலைகளுக்கு பொது சுத்திகரிப்பு நிலையம், 100 ஏக்கரில் அமைகிறது. 45 ஆலைகள் மூடப்பட்டு, 1.50 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சாய கழிவு, மாநகராட்சி கழிவு, திருமணிமுத்தாறில் கலப்பது தாய்ப்பாலில் விஷத்தை கலப்பது போன்றது. அதை நிரந்தரமாக தடுத்து நிறுத்தப்படும்.தமிழகத்தில், 10 ஆண்டில், 143 கிடங்கில் குப்பை தேக்கம் அதிகமாகிவிட்டது. அதில், 59 இடத்தில் குப்பையை முழுமையாக அகற்றி, 200 கோடி ரூபாய் மதிப்பில் உயிர் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன. குப்பையை எரித்தால் அதிலிருந்து கார்பன் வெளியேறி, சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்தும். பிளாஸ்டிக்கை எரித்தால், 'டையாக்சின்' எனும் வேதிப்பொருள் வெளியேறி, கேன்சர் போன்ற கொடிய நோயை உருவாக்கும். அதனால் குப்பையை எரிக்கக்கூடாது.ராணிப்பேட்டையில் ஒரே நாளில், 187 டன் பிளாஸ்டிக் குப்பையை அகற்றியது போன்று, தமிழகம் முழுதும் அகற்றப்படும். தமிழகத்தில், 2019 முதல், 14 வகை பிளாஸ்டிக் பொருளுக்கு தடை விதித்து, 1,177 டன் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. 174 உற்பத்தி ஆலைக்கு தடை விதித்து, 105 கோடி ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய அரசு, பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்துள்ளதை வரவேற்கிறோம். இதன்மூலம் வெளிமாநிலங்களில் இருந்து பிளாஸ்டிக் பொருட்கள் வருவது தடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X