கரூர், -''திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள், இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும்,'' என, அமைச்சர் செந்தில்பாலாஜி பேசினார்.
கரூர் திருமாநிலையூரில் நேற்று நடந்த விழாவில், 28.60 கோடி செலவில் முடிவுற்ற திட்டப் பணிகள், 581.44 கோடி ரூபாயில் புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 80 ஆயிரத்து 750 பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.அப்போது மின்சார துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது:கடந்த தேர்தலில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஆட்சி அமைய வேண்டும் என, 4 தொகுதிகளில் வாக்களித்தனர். அவர்களுக்கு, வேளாண் கல்லுாரி, புதிய பஸ் ஸ்டாண்ட், சுற்று வட்ட சாலை, இரண்டு கதவணைகள் என பல்வேறு நல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. திராவிட மாடல் ஆட்சியில் செயல்படுத்தும் திட்டங்கள் இந்தியா முழுவதும் செயல்படுத்த வேண்டும். இதற்கு கரூர் மாவட்ட மக்கள் உறுதியாக இருப்பர்.இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் நேரு, போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர், காங்.,-எம்.பி., ஜோதிமணி, கலெக்டர் பிரபுசங்கர் உட்பட பலர் பங்கேற்றனர்.