அரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய நோட்டுகள் வழங்குவது எப்போது? பெற்றோர் எதிர்பார்ப்பு
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கரூர்,-அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், நோட்டுகளை விரைவாக வழங்க வேண்டும் என, மாணவ, மாணவியரின் பெற்றோர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில், ஒன்றாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவியருக்கு விலையில்லா சீருடைகள், 10ம் வகுப்பு வரை நோட்டுகள், புத்தகப்பை, கலர் பென்சில்கள், கணித உபகரணப் பெட்டி உள்ளிட்ட, 17 வகையான கல்வி நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகின்றன.அதில், பாட புத்தகங்கள் முதல் நாளிலும், நோட்டுகள் முதல் வாரத்திலும் வழங்கப்படும். ஆனால், நடப்பாண்டு பள்ளி திறந்து, 20 நாட்களான நிலையில், பாட புத்தகங்கள் வழங்கிய நிலையில், நோட்டுகள் வழங்கப்படவில்லை. இதனால், மாணவ, மாணவியர் படிப்பில் கவனம் செலுத்த முடியவில்லை.இதுகுறித்து, பெற்றோர் கூறியதாவது:வழக்கமாக புதிய கல்வியாண்டில், மாணவர்களுக்கான கல்வி நலத்திட்ட உதவிகள் பட்டியல் பிப்ரவரி மாதமே, பள்ளிகளிலிருந்து பெறப்பட்டு, ஆர்டர் செய்யப்படும். மூன்று மாதங்களில் அவை தயார் செய்யப்பட்டு, பள்ளிகளுக்கு அனுப்பி மாணவர்களுக்கு வழங்கப்படும். ஆனால், இந்தாண்டுக்கான நோட்டுகள் இதுவரை வழங்கப்படவில்லை.ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் ஒரு பாடத்துக்கு ஒருநோட்டு வீதம், ஐந்து நோட்டுகள், கையெழுத்து பயிற்சிக்காக இரண்டு வரி, நான்கு வரி நோட்டுகள், கட்டுரை நோட்டுகள் இரண்டு, ஓவிய நோட்டு-1, நடுநிலை வகுப்புக்கு வடிவியல் நோட்டு ஒன்றும் வழங்கப்படும். ஆனால், பள்ளிகள் திறந்து, 20 நாட்களான நிலையில், ஒரு நோட்டு கூட மாணவ, மாணவியருக்கு வழங்கவில்லை.இதனால், மாணவர்கள் பழைய நோட்டுகளிலும், கடையில் பணம் கொடுத்து வாங்கியும் பயன்படுத்தி வருகின்றனர். தற்போது நோட்டுகள், 20 சதவீதம் வரை விலை உயர்ந்துள்ள நிலையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கும், மாணவ, மாணவியரின் பெற்றோர் மிகுந்த கவலையில் உள்ளனர். எனவே, மாணவ, மாணவியருக்கு விரைவாக, தமிழக அரசு நோட்டுகளை வழங்க வேண்டும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் திருச்சி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X