கொடுக்கல்-வாங்கல்
தகராறில் ௨ பேர் கைதுகோபி: திங்களூரை சேர்ந்தவர் பிரதீப், 35; திருப்பூர் மாவட்டம், குன்னத்துாரை சேர்ந்தவர் சதா நாடார், 36; இருவருக்கும் பணம், கொடுக்கல்-வாங்கலில் தகராறு இருந்தது. இந்நிலையில் சதா நாடாரிடம் பிரதீப் பணம் கேட்டார். அப்போது ஏற்பட்ட தகராறில், சதா நாடார் தரப்பினர் பிரதீப்பை தாக்கினர். புகாரின்படி, பங்களாப்புதுார் போலீசார் சதா நாடார், பாலாஜி பிரபு, 32, ஆகியோரை கைது செய்தனர். கோபியில் உள்ள மாவட்ட சிறையில் நேற்று அடைத்தனர். கைதான சதா நாடார், நாடார் சங்க நிர்வாகியாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர். வழக்கில் தலைமறைவாக உள்ள, ஈரோட்டை சேர்ந்த தினேஷ், 30, என்பவரை தேடி வருகின்றனர்.குழந்தையுடன் மாயமானமனைவி; கணவன் புகார்கோபி: கோபி அருகே பொம்மநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கநாதன், 29; கட்டட தொழிலாளியான இவரின் மனைவி கவுசல்யா, 27; தம்பதியருக்கு ஏழு வயதில் பெண், நான்கு வயதில் ஆண் குழந்தை உள்ளது. மகனுடன் வெளியே சென்ற கவுசல்யா, வீடு திரும்பவில்லை. அக்கம்பக்கம் மற்றும் உறவினர்கள் வீடுகளில் தேடியும் இருவரும் கிடைக்கவில்லை என்று, கோபி போலீசில் ரங்கநாதன் புகார் செய்துள்ளார். வழக்குப்பதிந்த போலீசார் தாய், மகனை தேடி வருகின்றனர்.போலீஸ் குடும்பத்தார்ஒன்று கூடிய நிகழ்ச்சிபவானி: பவானி சப்-டிவிஷனுக்கு உட்பட்ட பவானி, சித்தோடு, ஆப்பக்கூடல், பவானி மகளிர் போலீஸ் ஸடேஷன், போக்குவரத்து மற்றும் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து போலீசார் மற்றும் அதிகாரிகள், தங்கள் குடும்பத்தினருடன், ஒன்று கூடும் நிகழ்ச்சி, காடையம்பட்டியில் நேற்று நடந்தது. இதில் போலீசாரின் குழந்தைகள், பாட்டுப்பாடி, நடனமாடி கொண்டாடினர். இந்நிகழ்வு மனதுக்கு இதமாக இருந்ததாக, போலீசார் தெரிவித்தனர்.எக்ஸ்பிரஸ் ரயிலில் கிடந்த கஞ்சா 'பேக்' ஈரோடு: ஈரோடு மார்க்கமாக தன்பாத்--ஆலப்புழா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இதில் போதை பொருள் கடத்தப்படுவதாக, ஈரோடு ரயில்வே பாதுகாப்பு படையினருக்கு தகவல் வந்தது. இதனால் நேற்று காலை ஈரோட்டுக்கு, 7.15 மணிக்கு வந்த ரயிலில், பெட்டி-பெட்டியாக சோதனை மேற்கொண்டனர். இதில் ஒரு பெட்டியில் ஒரு பேக் கிடந்தது. கைப்பற்றி சோதனை செய்ததில், 9.5 கிலோ கஞ்சா பொட்டலமாக கட்டப்பட்டு இருந்தது. பேக்கை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.௨௫ லி., சாராய ஊறல்அழிப்பு; ஒருவர் கைதுகவுந்தப்பாடி: கவுந்தப்பாடி, பி.மேட்டுப்பாளையம், வேங்காமேடு, நேரு வீதியை சேர்ந்தவர் சுந்தரம், 46; இவரது தோட்டத்தில் மது விலக்கு போலீசார் நேற்று முன்தினம் சோதனை செய்தனர். அப்போது கேன்களில், 25 லிட்டர் சாராய ஊறல் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஊரலை கொட்டி அழித்த போலீசார், சுந்தரத்தை கைது செய்தனர். விற்பனைக்கு வைத்திருந்த, 26 மதுபாட்டில்களையும் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நான்கு வழக்கு பதிவு செய்தனர்.