பதவியிடங்கள் காலியாக உள்ளன.மாநில தேர்தல் ஆணைய உத்தரவுபடி, காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கு வரும் 9ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.இதையொட்டி, கடந்த மாதம் 20 முதல் 27ம் தேதி வரை வேட்பு மனுக்கள் பெறப்பட்டன. இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு, கழுமரம் 6, வடமருதுார் 4, நெய்வனை 5 என மொத்தம் 15 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது.அதேபோல், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு, நிறைமதி 2, அ.பாண்டலம் 3, நெடுமானுார் 1, பள்ளிப்பட்டு 6, எல்லைகிராமம் 1 என மொத்தம் 13 வேட்பு மனுக்கள் பெறப்பட்டிருந்தன. 8 பதவியிடங்களுக்கு போட்டியிட மொத்தம் 28 பேர் வேட்பு மனு அளித்திருந்தனர்.தொடர்ந்து, கடந்த 28ம் தேதி நடந்த வேட்புமனு பரிசீலனையில் அனைத்து மனுக்களும் ஏற்கப்பட்டது.
இதில், ஊராட்சி தலைவர் பதவிக்கு வேட்பு மனு அளித்தவர்களில் கழுமரம் 2, வடமருதுார் 2, நெய்வனை 4 என மொத்தம் 8 மனுக்கள் வாபஸ் பெறப்பட்டது.இதில், நெய்வனை ஊராட்சியில் எதிர்த்துபோட்டியிட யாருமில்லாததால் வீரமுத்து மனைவி காத்தாயி என்பவர் அன்னபோஸ்ட்டாக தேர்வு செய்யப்பட உள்ளார்.அதேபோல், அ.பாண்டலம் ஊராட்சியில் வார்டு உறுப்பினர் பதவிக்கு வேட்பு மனு அளித்தவர்களில் 2 பேர் தங்களது மனுவை வாபஸ் பெற்றுக் கொண்டனர். மேலும், நெடுமானுார் மற்றும் எல்லைகிராமம் ஆகிய ஊராட்சிகளில் காலியாக உள்ள வார்டு உறுப்பினர் பதவிக்கு தலா ஒருவர் மட்டுமே வேட்பு மனு அளித்துள்ளனர்.எனவே, இந்த 3 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்களும் அன்னபோஸ்ட்டாக தேர்வு செய்யப்பட உள்ளனர். இதனால் மீதமுள்ள 4 பதவியிடங்களுக்கு நடைபெறும் உள்ளாட்சி தேர்தலில் 14 பேர் களத்தில் உள்ளனர்.