நுால் விலை குறைந்தும் துணி விற்பனையில் சிக்கல் | திருப்பூர் செய்திகள் | Dinamalar
நுால் விலை குறைந்தும் துணி விற்பனையில் சிக்கல்
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 

பல்லடம்: நுால் விலை குறைந்துள்ள நிலையில், துணி விற்பனையில் சிக்கல் ஏற்பட்டு வருவதாக, விசைத்தறி ஜவுளி உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் பல்லடம் ஜவுளி உற்பத்தியாளர் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் கூறியதாவது:அபரிமிதமான நுால் விலை உயர்வு காரணமாக உற்பத்தியை பாதியாக குறைத்து இருந்தோம். நுால் விலை உயர்வுக்கு ஏற்ப, துணி விலை உயரவில்லை. நீண்ட இடைவெளிக்குப்பின் நுால் விலை குறைந்து வருகிறது.வரும் நாட்களில் நுால் விலை மேலும் குறைய வாய்ப்பு உள்ளது. இதனால், துணி விலையும் குறையும் என்ற எண்ணத்துடன், வியாபாரிகள் துணிகளை வாங்க மறுத்து வருகின்றனர்.

இதனால், ஏற்கனவே உற்பத்தி செய்யப்பட்ட துணிகளும் விற்பனையாகாமல் உள்ளன.இப்பிரச்னைக்காக, ஈரோடு மாவட்ட பகுதி விசைத்தறியாளர்கள் உற்பத்தி நிறுத்த போராட்டம் அறிவித்துள்ளனர். பஞ்சு, நுால் விலை குறைந்தால், மார்க்கெட் பழைய நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்தோம். ஆனால், எதிர்பார்ப்புக்கு மாறாக துணிகள் தேக்கமடைந்து வருகின்றன.நுால் விலை உயர்வால் நெருக்கடியில் இருந்த சூழலில், துணிகள் விற்பனையாகாதது கூடுதல் நெருக்கடியை ஏற்படுத்தி வருகிறது. கோவை, திருப்பூர் மாவட்டத்திலும் உற்பத்தி நிறுத்த போராட்டம் குறித்து ஆலோசித்து வருகிறோம். இவ்வாறு அவர் கூறினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X