அன்னுார் : ''தி.மு.க., ஆசியுடன் மண் கடத்தல் நடக்கிறது,'' என, பா.ஜ.,கோவை வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா குற்றஞ்சாட்டியுள்ளார்.
பின், பா.ஜ., வடக்கு மாவட்ட தலைவர் சங்கீதா நிருபர்களிடம் பேசுகையில், ''தி.மு.க., ஆசியுடன், கோவை வடக்கு மாவட்டத்தில், தினமும் சட்ட விரோதமாக பல ஆயிரம் லோடு மண் கடத்தப்படுகிறது. அதிகாரிகள் இவற்றை கண்டுகொள்வதில்லை. 'ஜல் ஜீவன்' திட்டத்தில் மத்திய அரசு பல ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி உள்ளது. இத்திட்ட விழாக்களில், மத்திய அரசு திட்டம் என்பதையும் பிரதமர் மோடி குறித்தும் தெரிவிப்பதில்லை. மத்திய அரசின் சாதனையை இருட்டடிப்பு செய்கின்றனர்,'' என்றார்.
கூட்டத்தில், மாவட்ட பொது செயலாளர்கள் சத்தியமூர்த்தி, சுபாஷ் சந்திரபோஸ், மாவட்ட செயலாளர் ஜெயபால், வடக்கு ஒன்றிய தலைவர் திருமூர்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.