இரண்டாம் போகம் விவசாயம் விதைப்பு பணி 'விறுவிறு' | நீலகிரி செய்திகள் | Dinamalar
இரண்டாம் போகம் விவசாயம் விதைப்பு பணி 'விறுவிறு'
Added : ஜூலை 03, 2022 | |
Advertisement
 
Latest district News



ஊட்டி : இரண்டாம் போகம் விவசாயத்திற்கு விவசாய நிலங்கள் விதைப்பு பணிக்கு தயார்படுத்தப்பட்டு வருகிறது.



நீலகிரியில், தேயிலைக்கு அடுத்தப்படியாக, மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு உற்பத்தி செய்யப்படும் மலை காய்கறிகள் தமிழகம் உட்பட கர்நாடகா, கேரளா உட்பட மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது.முதல் போகம் விவசாயம் முடிந்த நிலையில், மாவட்ட முழுவதும் பரவலாக பெய்த மழைக்கு விவசாயம் நிலங்கள் நல்ல ஈரப்பதம் ஏற்பட்டுள்ளது. உருளைகிழங்கு, கேரட், பூண்டு, பீட்ரூட் உள்ளிட்ட மலை காய்கறிகள் அதிகளவில் பயிரிட திட்டமிட்டுள்ளனர். இதனால், ஊட்டி மேல்கோடப்பமந்து பகுதி உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் விவசாயிகள் நிலங்களை சீரமைத்து விதைப்பு பணிக்கு தயார்படுத்தி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X