சேலம் : இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ்படிக்க அதிக ஆர்வம் காரணமாக, 'கவுன்சிலிங்' வரைகாத்திருக்காமல், நிர்வாக ஒதுக்கீட்டில் சேர கடும் போட்டி நிலவுகிறது.
இதனால், முன்னணி கல்லுாரிகளில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.சேலம் மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான இன்ஜினியரிங் கல்லுாரிகளில், கம்ப்யூட்டர் சயின்ஸ் பிரிவு நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி விட்டன. முன்னணி கல்லுாரிகளில் காத்திருப்போர் பட்டியலும் நீண்டுகொண்டே செல்கிறது.
தனியார் இன்ஜினியரிங் கல்லுாரி முதல்வர் ஒருவர் கூறியதாவது:
கல்லுாரிக்கு வரும், 10மாணவர்களில் எட்டு பேர் கம்ப்யூட்டர் சயின்ஸ் பாடப்பிரிவில் சேர ஆர்வம் காட்டுகின்றனர்.கவுன்சிலிங்கில் விரும்பிய கல்லுாரியில்சீட் கிடைக்குமோ, கிடைக்காதோ என்ற பதட்டத்தில் நிர்வாக ஒதுக்கீட்டில் சேரவும் தயாராக உள்ளனர். இதனால், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பி, காத்திருக்கும் நிலை உள்ளது.
இவ்வாறு கூறினார்.