ஆத்துார் : சேலம் மாவட்டம், ஆத்துார், புதுப்பேட்டை வேளாண் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் மஞ்சள் ஏலம் நேற்று நடந்தது. சுற்றுவட்டார விவசாயிகள், மஞ்சளை கொண்டு வந்தனர். ஆத்துார், நாமகிரிப்பேட்டை, சேலம், ஈரோடு பகுதி வியாபாரிகள், தரத்துக்கேற்ப விலை நிர்ணயித்தனர். குவிண்டால் விரலி ரகம், 5,600 முதல், 9,516 ரூபாய்; உருண்டை ரகம், 4,800 முதல், 7,600 ரூபாய்; பனங்காலி, 3,000 முதல், 12, 500 ரூபாய் வரை விலைபோனது. 2,560 மூட்டைகள் மூலம், 1.15 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடந்தது.