ஒழுங்கீனம், முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறுவேன்: முதல்வர் எச்சரிக்கை
Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 03, 2022 | கருத்துகள் (62) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

நாமக்கல்: ஒழுங்கீனம் மற்றும் முறைகேடு அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.



நாமக்கல் நடந்த உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாட்டில் ஸ்டாலின் பேசியதாவது: உள்ளாட்சி அமைப்புகள் தான் மக்களாட்சியின் உயிர்நாடி. பெண்கள் உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றது சாதாரணமானது அல்ல. அண்ணாதுரை, காமராஜர், ராஜாஜி ஆகியோர் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டவர்கள். நானும் சென்னை மேயராக இருந்துள்ளேன். மக்கள் பணியில் முதல் பணி உள்ளாட்சி அமைப்புகள் தான்.





அதன் மூலம் தான் மக்களுக்கு நேரடியாக தொண்டாற்றும் பயிற்சியை பெறும். மக்கள் தொண்டுக்கு பயிற்சி பெறும் வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துள்ளது. தமிழகத்தின் அனைத்து ஊர்களும் மாற வேண்டும். அனைத்து மாவட்டங்களும், ஊர்களும் வளர வேண்டும். அது உங்களின் கைகளில் உள்ளது.

நீங்கள் தவறு செய்துவிட்டால் மக்கள் உங்களை புறக்கணிப்பார்கள். எந்த குற்றச்சாட்டுக்கும் ஆளாகாமல் பணியாற்ற வேண்டும்.புதிதாக வந்த பெண்களுக்கு பயமோ கூச்சமோ இருக்கக்கூடாது.பெண்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். பொறுப்புகளை கணவர்களிடம் தரக்கூடாது. மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். கட்சிக்கும் ஆட்சிக்கும் களங்கத்தை ஏற்படுத்தும் நிலையை யாரும் ஏற்படுத்தி விடக்கூடாது. தவறு செய்தால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். யாரோ செய்யும் தவறினால், முதல்வராகிய நானும், கோடிக்கணக்கான தொண்டர்களும் வெட்கிதலை குனியும் நிலையை ஏற்படுத்திவிடக்கூடாது. ஒழுங்கீனங்கள் அதிகரித்தால் சர்வாதிகாரியாக மாறி நடவடிக்கை எடுப்பேன். இவ்வாறு அவர் பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சேலம் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (62)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ravi - chennai,இந்தியா
09-ஜூலை-202208:12:56 IST Report Abuse
ravi ஊரான் காசில் இலவசங்களை கொடுத்து மக்களை முழு சோம்பேறிகளாக்கி சாராயத்தை கொடுத்து மூளையை செயலிழக்க செய்து 200 ருபாய் முதல் 5000 ருபாய் வரை வாக்குக்கு ஊக்கத்தொகையாக கொடுத்து ஊரை அடிச்சி உலையில் போட்டு அரசு ஊழியர்களை வைத்து வாக்குச்சாவடியில் திருட்டு வாக்குப்பதிவு செய்து காவல்துறையை மிரட்டி அட்டூழியங்களை செய்து வாக்குரிமையை நிறைவேற்றும் அப்பாவி மக்களை ஏமாற்றி ஆட்சிக்கு வந்து எல்லா துறைகளிலும் லஞ்சம் புரையோட மாணவர்களை போதை பொருட்களுக்கு அடிமையாக்கி கொலைகாரர்களாக்கி இந்தியை தாங்கள் மட்டும் கற்றுக்கொண்டு ஏழைகளை இலவசமாக இந்தியை கற்கவிடாமல் திணிப்பு என்ற பெயரில் தடுத்து தாங்கள் நடத்தும் பள்ளிகளில் இந்தியை சுதந்திரமாக நடமாடவிட்டு கொள்ளையடித்து, பாலியலில் அழியும் ஆசிரியர்களை நிரந்தபணிநீக்கம் செய்ய துப்பில்லாமல் ஊராட்சி நகராட்சி எல்லா இடங்களிலும் அடாவடிகள் மேலோங்க கடைகளில் சூறையாடி தொழில்துறையை நிர்மூலமாக்கி விலைவாசியை கட்டுப்படுத்தாமல் தறிகெட்டு திரியும் வணிகர்களோடு கைகோர்த்து கோடிக்கணக்கில் கொள்ளையடித்து ஒரு குடும்பத்தை வளர்ப்பதற்கு அல்லக்கைகளை பயன்படுத்தும் தில்லாலங்கடிதான் திராவிடமாடல். இதுதான் கருணா குடும்ப முன்னேற்றக்கட்சி கண்டுபிடித்த ஜனநாயகம்.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
07-ஜூலை-202214:19:23 IST Report Abuse
madhavan rajan முதல்வரின் முழு அதிகாரமே இவரிடம் இருப்பதாக தெரியவில்லை. இவர் மேடையில் பேசியதை பற்றி கேட்டால் இவருடைய கட்சித் தலைவர் ஒருவர் தேர்தல் அறிக்கை தயாரித்தவரை தான் கேட்கவேண்டும். கட்சித்தலைவருக்கும் அதற்கும் சம்பந்தம் இல்லை என்று கூறுகிறார். அதற்கு இவரும் அமைதி காக்கிறார். இவர் இருக்கும் அதிகாரத்தையே கட்சியில் பயன்படுத்துவதில்லை. இவர் எங்கே சர்வ அதிகாரியாக மாறுவது. ஒழுங்கீனம், முறைகேடு இவர்கள் கட்சியில் இல்லையென்றால் ஆட்சியையே பிடித்திருக்க முடியாதே.
Rate this:
Cancel
ravi - chennai,இந்தியா
07-ஜூலை-202208:16:13 IST Report Abuse
ravi முதல்வரே நீங்க எப்போ நல்லவரா இருந்திருக்கீங்க-கல்லூரியில் படிக்கும்போதே ஓட ஓட அடித்து துரத்தப்பட்டவர் தானே தாங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X