300 பேருக்குகண் பரிசோதனை | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
300 பேருக்குகண் பரிசோதனை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

கடப்பாக்கம் : இடைக்கழிநாடு பேரூராட்சிக்குட்பட்ட கடப்பாக்கம் கிராமத்தில், இலவச கண் மருத்துவ சிகிச்சை மற்றும் கண்புரை அறுவை சிகிச்சை தேர்வு முகாம் நேற்று நடைபெற்றது.

சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர்களால், கடப்பாக்கம் உளூரு மருத்துவமனையில் நடைபெற்ற முகாமில், கடப்பாக்கம், ஆலம்பறைக்குப்பம், வேம்பனுார், கப்பிவாக்கம், விளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராமங்களில் இருந்து சுமார் 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.இதில், மருத்துவர்களால் பரிசோதிக்கப்பட்டு, 134 பேருக்கு சிறிய கண் குறைபாடு இருந்த காரணத்தால், கண்ணாடி வழங்கப்பட்டது.மேலும், 75 பேருக்கு கண்ணில் புரை அதிக அளவில் வளர்ந்து இருப்பதால், அறுவை சிகிச்சைக்காக பதிவு செய்யப்பட்டனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X