பாலாற்று குடிநீர் சீராக வினியோகிக்க கோரிக்கை | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
பாலாற்று குடிநீர் சீராக வினியோகிக்க கோரிக்கை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

உத்திரமேரூர் : காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட படூர் உள்ளிட்ட கிராமங்களுக்கு, பாலாற்று குடிநீர் சீராக வினியோகிக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.



உத்திரமேரூர் ஒன்றியம், காட்டாங்குளம் ஊராட்சியில், காட்டாங்குளம், படூர், அமராவதிபட்டிணம் உள்ளிட்ட கிராமங்கள் உள்ளடங்கி உள்ளன. இந்த ஊராட்சியின் குடிநீர் தேவைக்கு, படூர்- ஆனம்பாக்கம் கூட்டு குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. திருமுக்கூடல் பாலாற்றில் அமைத்துள்ள ஆழ்த்துளை கிணற்றில் இருந்து, தண்ணீர் உறிஞ்சப்பட்டு, படூர் கூட்டுச்சாலையில் உள்ள தரைமட்ட நீர்த்தேக்க தொட்டிக்கு தண்ணீர் நிரப்பப்படுகிறது. பின், வீட்டு குடிநீர் குழாய் இணைப்பு வாயிலாக ஆனம்பாக்கம் மற்றும் காட்டாங்குளம் ஊராட்சி கிராமங்களுக்கு குடிநீர் வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், காட்டாங்குளம் மற்றும் படூர் மேடான பகுதி என்பதால், அப்பகுதிகளுக்கு பூமிக்கடியில் புதைக்கப்பட்ட குடிநீர் பைப் வாயிலாக தண்ணீர் சீராக செல்வதில்லை என கூறப்படுகிறது. இதனால், அக்கிராமங்களுக்கு, ஏரி அருகே கிணறு அமைத்து, ஊராட்சி நிர்வாகம் சார்பில் குடிநீர் வினியோகிக்கப்படுகிறது. இந்த குடிநீர் போதுமானதாக இல்லை எனவும், ஏரி தண்ணீர் சுவையானதாக இல்லை எனவும் கூறப்படுகிறது.எனவே, இப்பகுதி கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ், காட்டாங்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்கு சீரான முறையில் பாலாற்று குடிநீர் வினியோகிக்க வேண்டும் என அப்பகுதி வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X