பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
பூட்டை உடைத்து பணம், நகை திருட்டு
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

ஊத்துக்கோட்டை : ஆரணி பேரூராட்சி அடுத்த, நடுக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வம், 68.நேற்று முன்தினம் இவர், குடும்பத்தினருடன் பெரியபாளையம் பவானியம்மன் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய சென்று விட்டு நேற்று காலை வீடு திரும்பினார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டார். உள்ளே சென்று பார்த்தபோது, பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த கம்மல், செயின் உள்ளிட்ட, 10 சவரன் நகை மற்றும், 68 ஆயிரம் பணம் ஆகியவை திருடு போனது தெரிந்தது.இது குறித்து செல்வம், ஆரணி போலீசில் அளித்த புகாரையடுத்து, போலீசார் வழக்குப் பதிந்து, மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X