பொன்னேரி : பொன்னேரி அடுத்த, வேண்பாக்கம், சாம்பசிவம் நகரைச் சேர்ந்தவர் லாரன்ஸ் ஜான், 62. இவரது வீட்டின் கீழ்தளத்தில், வசித்து வரும் அரசு மருத்துவர் ஜினிதா, பணி மாறுதல் பெற்று, கடந்த 15ம்தேதி ஊட்டி, குன்னுார் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றிருந்தார்.
கடந்த 30ம் தேதி காலை, லாரன்ஸ் ஜான், கீழே வந்து பார்த்தபோது, மருத்துவர் ஜினிதாவின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டார்.இது குறித்து ஜினிதாவிற்கு தகவல் தெரிவித்தார். அவரது ஆலோசனையின்படி, வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது, மூன்றரை சவரன் நகை திருடு போயிருப்பது தெரிந்தது.மருத்துவர் ஜினிதாவின் சார்பில், நேற்று முன்தினம் இரவு, லாரன்ஸ் ஜான் அளித்த புகாரையடுத்து, பொன்னேரி போலீசார் வழக்கு பதிந்து, மேற்கண்ட திருட்டில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.