நிறுத்தப்பட்ட சாலை பணிகள் மீண்டும் தொடர கோரிக்கை | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
நிறுத்தப்பட்ட சாலை பணிகள் மீண்டும் தொடர கோரிக்கை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

தாம்பரம் : உள்ளாட்சி தேர்தலுக்கு முன் நிறுத்தப்பட்ட சாலை பணியை, மீண்டும் தொடர வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



தாம்பரம் மாநகராட்சியின், 52வது வார்டு, மேற்கு தாம்பரம், கன்னடபாளையம், வசந்தம் நகர் மற்றும் அதைச் சுற்றிய நான்கு தெருக்களில், 1,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில், உள்ளாட்சி தேர்தலுக்கு முன், 80 லட்சம் ரூபாய் மதிப்பில் சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக வசந்தம் நகர், 1,2,3,4 ஆகிய தெருக்களில் ஜல்லி கற்கள் கொட்டப்பட்டன. உள்ளாட்சி தேர்தல் நெருங்கிய நிலையில், சாலை பணிகள் திடீரென நிறுத்தப்பட்டன.

தேர்தல் முடிந்து, நான்கு மாதங்களாகியும், தற்போது வரை சாலையை சீரமைக்க மாநகராட்சி அதிகாரிகள் முன்வரவில்லை.இதனால், ஜல்லி கற்கள் கொட்டப்பட்ட சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர்.மாநகராட்சி அதிகாரிகள் கவனித்து, சம்பந்தப்பட்ட சாலையை சீரமைக்க முன்வர வேண்டும் என, பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X