நெல்வாயில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு | செங்கல்பட்டு செய்திகள் | Dinamalar
நெல்வாயில் குவியும் குப்பையால் சுகாதார சீர்கேடு
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

மதுராந்தகம் : மதுராந்தகம் - நெல்வாய் கூட்டு சாலை அருகில் கொட்டப்படும் குப்பைகளால் துர்நாற்றம் வீசி தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் ஒன்றியம், மங்களம் ஊராட்சிக்கு உட்பட்ட நெல்வாய் கூட்டு சாலை அருகில், 100க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளது. இந்த கிராமத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை பொதுமக்கள் அதிகமாக கூடும் நியாயவிலைகடை, கிராம நிர்வாக அலுவலகம், குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி குளம் போன்றவற்றின் அருகில், ஊராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டி குவித்துள்ளனர்.

இந்த, குப்பைகளை நாய்கள், பன்றிகள் கிளறி விடுவதால் துர்நாற்றம் வீசுவதுடன், சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. அப்பகுதியில் வசிப்போர் அவதிப்பட்டு வருகின்றனர். இதனால், அங்கு வசிப்பவர்கள் நோய் தொற்று ஏற்பட்டுவிடுமோ என, அச்சமடைகின்றனர். எனவே, அப்பகுதியில் கொட்டப்படும் குப்பைகளை அப்புறப்படுத்த ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X