ரயில்வே அதிகாரிகளே, கவனிக்க மாட்டீங்களா!
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

திருப்பூர்;ரயில் விட்டு இறங்கி வரும் பயணிகளை அழைத்து செல்ல வருவோரிடம் 'கறார்' கட்டணம் வசூலிப்பதால், வாகன ஓட்டிகள் அதிருப்தி அடைகின்றனர்.இவ்விஷயத்தில் சேலம் கோட்ட அதிகாரிகள் தலையிட்டு அறிவிப்பு பலகை வைக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் முதல் பிளாட்பார்ம், இரண்டாம் பிளாட்பார்ம் இரண்டுக்கும் வெளியே டூவீலர் ஸ்டாண்ட் உள்ளது. ரயில் ஏற வருவோர் இதில் வாகனங்களை நிறுத்தி விடுகின்றனர்.உறவினர், நண்பர்களை ரயிலுக்கு வழியனுப்ப வருவோர், ரயில் விட்டு இறங்கி வருவோரை அழைத்து செல்ல வருவோர் நிற்க, தனியிடம் ஒதுக்கப்பட்டுள்ளது.இங்கு வாகனங்களை நிறுத்தி விட்டு சென்றால் மட்டுமே கட்டணம் வசூலிக்க வேண்டும். ஆனால், ரயில்வே ஸ்டேஷன் முன் காத்திருந்தாலே டோக்கன் வழங்கி, ஒப்பந்ததாரர்கள் பத்து ரூபாய் முதல், 30 ரூபாய் வரை கறார் வசூல் செய்வதாக வாகன ஓட்டிகள் குற்றம்சாட்டுகின்றனர்.நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஒருவர் டூவீலரை நிறுத்திவிட்டு காலை, 11:30க்கு வந்து எடுத்த போது, 20 ரூபாய் கட்டணம் வசூலித்துள்ளனர்.சென்னையில் இருந்து திருப்பூர் வந்திறங்கியவரை அழைத்து செல்ல ஒருவர் காரில் வந்துள்ளார். கார் விட்டு இறங்காமல் அவர், காருக்குள் அமர்ந்தபடியிருக்க, சில நிமிடம் மட்டும் காத்திருந்தார். அங்கிருந்தவர், காருக்கு 'பார்க்கிங்' கட்டணம் கேட்டு, டோக்கன் வழங்கமுற்பட்டுள்ளார்.'பார்க்கிங் செய்யும் இடம் தவிர வேறு இடங்களில் கார் நிறுத்துவதை கேட்க உங்களுக்கு உரிமை இல்லை,' என கார் டிரைவர் வாக்குவாதம் செய்துள்ளார்.கட்டணம் செலுத்திவில்லையெனில் காரை எடுத்துச் செல்ல முடியாது என டோக்கன் வழங்குபவர் தெரிவித்துள்ளார். தினசரி வாக்குவாதம், சண்டை தொடர்கிறது. பயணிகளை அழைத்து செல்ல வந்து காத்திருப்போரிடம் கட்டணம் வசூலிப்பது ஏற்புடையதல்ல.சேலம் ரயில்வே கோட்ட நிர்வாகம் தலையிட்டு வெளிவளாகத்தில் வாகனம் நிறுத்தம் கட்டணம் உண்டா, இல்லையா, எவ்வளவு நேரத்துக்கு, எந்தெந்த வாகனத்துக்கு என்ன கட்டணம் என்பதை அறிவிப்பாக வைத்து தெளிவுப்படுத்த வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X