மேலூர் : மேலவளவு பகுதியில் விபத்து மற்றும் நோயினால் பாதிக்கப்படுவோருக்கு சிகிச்சை அளிக்க சுகாதார நிலையம் இல்லாததால் மேலுாருக்கு கொண்டு செல்வதற்குள் மரணம் சம்பவிக்கிறது.மேலவளவு, சென்னகரம்பட்டி, பட்டூர் உள்ளிட்ட மூன்று ஊராட்சிகளில் 11 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் விவசாயம். வயல்வெளியில் பணியாற்றுவோர்
பாம்பு கடி, விபத்து உட்பட பல்வேறு சிரமத்திற்கும் ஆளாகின்றனர். இப்பகுதியில் நோய் தாக்குதலுக்கு சிகிச்சை அளிக்க ஆரம்ப சுகாதார நிலையம் இல்லாததால் பொதுமக்கள் அவதி.ஊராட்சி தலைவி தங்கம் கூறியதாவது: இப்பகுதியில் சுகாதாரநிலையம் இல்லாததால் சில நாட்களுக்கு முன் மின்சாரம் தாக்கி உயிருக்கு போராடியவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க மேலுாருக்கு 12 கி.மீ., கொண்டு சென்றனர்.
அதற்குள் பாதிக்கப்பட்டவர் வழியிலேயே இறந்தார். இதுபோல பலவித பாதிப்புகள் உள்ளதால், இங்கு சுகாதாரநிலையம் அமைக்க வலியுறுத்தி அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளேன். கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். துணை இயக்குநர் செந்தில்குமார் கூறுகையில், ''மனு குறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.