போலீஸ் செய்திகள்...
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 



விவசாயிக்கு அரிவாள் வெட்டு

மேலூர்: கிளாதிரி, லெட்சுமிபுரம் விவசாயி முத்து 28, நேற்று முன்தினம் மதுரைக்கு சென்றவர், டூ வீலரில் இரவு 11.00 மணிக்கு வீடு திரும்பினார். பூஞ்சுத்தி முனியன் கோயில் அருகே பின்னால் மற்றொரு டூ வீலரில் வந்த மூவர் முத்துவின் வாகனம் மீது மோதினர். கீழே விழுந்த முத்துவை மூவரும் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பினர். காயமடைந்த முத்து மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தேள் கடித்து - மாணவர் பலி
கொட்டாம்பட்டி: பூமங்கலப்பட்டி செந்தமிழ்செல்வன் மகன் நித்திஷ் 13, கொட்டாம்பட்டி தனியார் பள்ளியில் 8 ம் வகுப்பு படித்தார். ஜூன் 22 ல் பள்ளியில் கீழே கிடந்த தார்ப்பாயை எடுத்த போது, அதனுள் இருந்த தேள் கொட்டியதில் மாணவர் மயங்கினார். மாணவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். சிகிச்சை பலனின்றி நேற்று மாணவர் இறந்தார். மாணவரின் உறவினர்கள் பள்ளி நிர்வாகியை கைது செய்யக்கோரி கொட்டாம்பட்டி போலீஸ் ஸ்டேஷனை முற்றுகையிட்டனர். டி.எஸ்.பி., பிரபாகரன் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததால் கலைந்து சென்றனர்.

கொள்ளை திட்டம்: 5 பேர் கைது

மதுரை ரிங்ரோடு வண்டியூர் விலக்கு பகுதியில் அண்ணாநகர் போலீஸ் உதவி கமிஷனர் சூரக்குமார் தலைமையில் தனிப்படை போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். சங்குநகரில் சிலர் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்தது. அங்கு சந்தேகமான வகையில் திரிந்த மதுரை கான்பாளையம் பிரேம்குமார், 19, பாலாஜி நகர் அஜய்,20, செங்கல்பட்டு ஜெகன்,24, மனோஜ் 30, சென்னை லோகேஷ்வரன் 20, ஆகியோரை விசாரித்தனர்.

அவர்களிடம் மிளகாய் பொடி, அரிவாள் இருந்தது. இப்பகுதியில் பூட்டிய வீட்டில் கொள்ளையடிக்க திட்டமிட்டு அஜய், பிரேம்குமார் கொடுத்த தகவல்படி மற்றவர்கள் அங்கு வந்தது தெரியவந்தது. அனைவரையும் போலீசார் கைது செய்தனர்.கிணற்றில் மூழ்கி வாலிபர் பலிஅலங்காநல்லுார்: மதுரை ஆழ்வார்புரம் முத்துமுருகன் 23, நேற்று மாலை நண்பர்களுடன் அலங்காநல்லுார் அருகே பன்னைக்குடி பகுதி கிணற்றில் குளித்தபோது மூழ்கினார். தீயணைப்பு வீரர்கள் முத்துமுருகன் உடலை மீட்டனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X