அதிகரிக்கும் கொரோனா; நடவடிக்கை தேவை | கள்ளக்குறிச்சி செய்திகள் | Dinamalar
அதிகரிக்கும் கொரோனா; நடவடிக்கை தேவை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
Latest district News

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று 4வது அலையின் தாக்கம் பரவ தொடங்கியுள்ளதையொட்டி, வழிகாட்டு நெறிமுறைகளை கட்டாயப்படுத்திட கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் கொரோனா தொற்று முதல் மற்றும் இரண்டாவது அலையின் தாக்கம் மிகவும் அதிகமாக இருந்தது. தொற்று தடுப்பு நடவடிக்கையாக பொதுமக்கள் முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல் மற்றும் அடிக்கடி கை கழுவுதல் ஆகியவற்றை பின்பற்றுமாறு அரசு அறிவுறுத்தியது. நோய் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது. ஆனாலும், மாவட்டத்தில் தொற்றினால் 220க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.பெரும்பாலான பொதுமக்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டதால், மூன்றாவது அலை தாக்கத்தில் உயிரிழப்புகள் குறைந்தது. சில மாதங்களிலேயே மூன்றாவது அலையின் தாக்கம் முழுவதுமாக கட்டுப்பாட்டிற்குள் வந்தது.கடந்த சில மாதங்களாக கொரோனா பரவல் இல்லாததால், மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர்.

இந்நிலையில் கொரோனாவின் 4வது அலை பரவ தொடங்கியுள்ளது.இதையொட்டி கடந்த சில நாட்களாக பாதிப்பு ஏற்பட தொடங்கியுள்ளது. மாவட்டத்தில் நேற்று 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. மொத்தமாக 28 பேர் தொற்றினால் பாதிக்கப்பட்டு, வீட்டில் சிகிச்சையில் உள்ளனர்.கொரோனா தொற்று சமூக பரவலை எட்டுவதற்கு முன், முககவசம் அணிதல், சமூக இடைவெளியினை பின்பற்றுதல், பொது இடங்களில் அதிகளவு மக்கள் ஒன்றாக கூடுவதை தவிர்த்தல் உள்ளிட்ட நடைமுறைகளை கட்டாயமாக்க கலெக்டர் ஸ்ரீதர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X