கள்ளக்குறிச்சி பஸ் நிலையத்தில் தாறு மாறா நிறுத்தப்படும் பஸ்களால் பொதுமக்கள் அவதி
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி பஸ் ஸ்டேண்டில் அதிக எண்ணிக்கையில் சேலம் மார்க்கமாக செல்லும் பஸ்களை கூட்டம் கூட்டமாக நிறுத்துவதை தவிர்த்து வேறிடத்திற்கு மாற்றி கட்டைகளில் நிறுத்தி, போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.



கள்ளக்குறிச்சியின் மைய பகுதியான நான்கு வழிச்சாலையோரம் பஸ் ஸ்டேண்ட் அமைந்துள்ளது. மூன்றரை ஏக்கர் பரப்பிலான பஸ் ஸ்டேண்டில் நகராட்சி சார்பில் 102 கடைகள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் இணைந்தவாறு நடைமேடையும், அதன் அருகில் 50க்கும் மேற்பட்ட பஸ்கள் நிறுத்துவற்கான கட்டைகளும் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு நாளொன்றுக்கு கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம் ஆகிய உள்ளூர் டெப்போக்களை சேர்ந்த 200க்கும் மேற்பட்ட பஸ்களும், வெளியூர்களிலிருந்து தினமும் வந்து செல்லும் பஸ்கள் என 400க்கும் மேற்பட்ட பஸ்கள் வந்து செல்கின்றன.கட்டைகளில் பஸ்களை நிறுத்துவதை டிரைவர்கள் தவிர்த்து வருகின்றனர்.

இதனால் பஸ் ஸ்டேண்டிற்குள் உள்ளே செல்ல முடியாமல் சேலம் மார்க்கமாக செல்லும் 10க்கும் மேற்பட்ட பஸ்கள் வழியை அடைத்தவாறு தாறு ,மாறா நிறுத்தப்படுகிறது. இதனால் பயணிகள், பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர்.இதனால் மற்ற பகுதிகளுக்கு செல்லும் பஸ்கள் ஸ்டேண்டினுள் நுழைய முடியாத நிலை ஏற்படுகிறது.

இதனை தவிர்க்க 10 நிமிடத்திற்கு ஒரு பஸ் என்ற கணக்கில் சேலம் மார்க்கமாக அதிக எண்ணிக்கையில் உள்ள பஸ்களை தற்போது டவுன் பஸ்கள் நிறுத்தும் பகுதியிலோ அல்லது திருக்கோவிலுார் பஸ்கள் நிற்கும் பகுதியிலோ நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒரு மணி நேரத்திற்கு ஒரு பஸ் என்ற கணக்கில் திருக்கோவிலுார் மார்க்கமாக செல்லும் பஸ்கள் நிறுத்துமிடம் எப்போதும் காலியாகவே இருக்கும். இதுபோன்ற குழப்பங்களை உடனடியாக களைந்து, ஸ்டேண்டினுள் அனைத்து பஸ்களையும், அதற்கான கட்டைகளில்தான் நிறுத்த போலீசார் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X