'தினமலர்' நாளிதழுக்கு ஆசிரியர்கள் நன்றி | சென்னை செய்திகள் | Dinamalar
'தினமலர்' நாளிதழுக்கு ஆசிரியர்கள் நன்றி
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

சென்னை: அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், தொழிற்கல்வி மாணவர்களுக்கும் இன்ஜினியரிங் படிப்புக்கான சேர்க்கை வழங்கப்படும் என, அறிவித்த தமிழக அரசுக்கும், 'தினமலர்' நாளி தழுக்கும், ஆசிரியர் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது.



இதுகுறித்து, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர் கழக மாநில தலைவர் ஜனார்த்தனன், பொது செயலர் ரவி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை:அரசு பள்ளிகளில், பிளஸ் 2 தொழிற்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலை வளாகத்தில் உள்ள கல்லுாரிகளிலும், அதன் உறுப்பு கல்லுாரிகளிலும், இதுவரை, பி.இ., மாணவர் சேர்க்கை வழங்கப்படாமல் இருந்தது.

இதுதொடர்பாக, ஆசிரியர் சங்கத்தினர் நீண்ட நாட்களாக கோரிக்கை விடுத்து வந்தனர். இந்தப் பிரச்னை குறித்து, 'தினமலர்' நாளிதழில் தொடர்ந்து விரிவான செய்திகள் வெளியாகின.இந்த செய்திகளின் எதிரொலியாக, இந்த ஆண்டு முதல், அண்ணா பல்கலை மற்றும் அதன் உறுப்பு கல்லுாரிகளில், இன்ஜினியரிங் சேர்க்கையில், தொழிற்கல்வி மாணவர்களுக்கும் இடம் வழங்கப்படும் என, உயர்கல்வி அமைச்சர் பொன்முடி அறிவித்தார். தொழிற்கல்வி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், அரசு எடுத்துள்ள இந்த முடிவை, மனதார வரவேற்று பாராட்டுகிறோம்.

இதற்கு உத்தரவிட்ட முதல்வர் ஸ்டாலின், உயர்கல்வி அமைச்சர் பொன்முடி, இந்த பிரச்னையை, விரிவான செய்தியாக வெளியிட்டு, அரசின் கவனத்தை ஈர்த்து தீர்வு கண்ட, 'தினமலர்' நாளிதழுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி. மெல்லக் கற்கும் மாணவர்களின் நலன் கருதி, வேலைவாய்ப்புடன் கூடிய, தரம் உயர்த்தப்பட்டுள்ள தொழிற்கல்வி பாடங்களை, தமிழகத்தில் உள்ள அனைத்து மேல்நிலை பள்ளிகளிலும், கட்டாயப் பாடமாக நடைமுறைப்படுத்தவும், அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X