புதுச்சேரி : இந்திய மருத்துவ சங்கத்தின் புதுச்சேரி கிளை மற்றும் சென்னை வடபழனி சிம்ஸ் மருத்துவமனை சார்பில், தொடர் மருத்துவக் கருத்தரங்கம் ஓட்டல் ஆனந்தா இன்னில் நேற்று நடந்தது.டாக்டர்கள் வேல்முருகன், குமார், சையத் அப்ரோஸ், சுனில் கபில்வாய் ஆகியோர் எலும்பியல், நரம்பியல், புற்றுநோய் உள்ளிட்ட மருத்துவ துறைகளில் ஏற்பட்டுள்ள நவீன சிகிச்சைகள் குறித்து பேசினர். டாக்டர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.இந்திய மருத்துவ சங்க புதுச்சேரி கிளையின் செயல்பாடு குறித்து விளக்கப்பட்டது. நிகழ்ச்சியில் புதுச்சேரி கிளை தலைவர் சுதாகர், பொதுச் செயலாளர் சீனிவாசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முத்தியால்பேட்டை பஜனை மட கோவில் தெருவில் நாய் தொல்லை உச்சக்கட்டத்தில் உள்ளதுபாலமுருகன், முத்தியால்பேட்டை.உடைந்த குப்பைத் தொட்டிதட்டாஞ்சாவடி தொழிற்பேட்டை நுழைவு வாயில் அருகே, உழவர்கரை நகராட்சியின் குப்பைத் தொட்டி உடைந்துள்ளது.அருண், தட்டாஞ்சாவடி.சாலை படுமோசம்பெரியக்காலாப்பட்டில் உள்ள தி ஸ்டடி பள்ளி வழியாக சுனாமி குடியிருப்புக்கு செல்லும் சாலை குண்டும் குழியுமாக உள்ளது.விஜயலட்சுமி, பெரியக் காலாப்பட்டு.காலி மனைகளால் சிக்கல் அரும்பார்த்தபுரம் பகுதியில் உள்ள காலி மனைகளில் புதர்மண்டி, விஷ பூச்சி நடமாட்டம் அதிகரித்துள்ளது.சரசு, அரும்பார்த்தபுரம்.போக்குவரத்துக்கு இடையூறுபுதுச்சேரி காமராஜ் நகர் வாணிதாசன் வீதியில் ஆக்கிரமிப்பு அதிகமாக உள்ளதால் போக்குவரத்திற்கு இடையூராக உள்ளது.தங்கராஜ், புதுச்சேரி.உடைந்த நடைபாதை மரப்பாலம் ஐ.ஓ.பி., வங்கி எதிரில் உள்ள இரும்பு நடைபாதை உடைந்து, பொதுமக்களுக்கு அச்சுறுத்தலாக உள்ளது.மகாலிங்கம், தேங்காய்த்திட்டு.