விஜயகாந்திற்கு வீட்டிலேயே சிகிச்சை | சென்னை செய்திகள் | Dinamalar
விஜயகாந்திற்கு வீட்டிலேயே சிகிச்சை
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
Latest district News

\சென்னை: மருத்துவமனையில் இருந்து திரும்பிய விஜயகாந்த், 70, படுத்த படுக்கையாக உள்ளதால், வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்படுகிறது.



தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்த், பல ஆண்டுகளாக உடல்நல குறைவால் அவதிப்பட்டு வருகிறார். தீவிர அரசியலில் ஈடுபட முடியாமல், வீட்டிலேயே முடங்கி விட்டார்.ஏற்கனவே, அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டுள்ளது. பேசும் திறனும் குறைந்துள்ளது. நரம்பு பிரச்னையால் நடக்கவும் முடியவில்லை.

சமீபத்தில், நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அவரது காலின் மூன்று விரல்கள் அகற்றப்பட்டன. சென்னை மணப்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில், இந்த அறுவை சிகிச்சை முடிந்து, வீட்டிற்கு திரும்பினார். அவருக்காக வீட்டிலேயே, மருத்துவமனையில் உள்ளது போன்ற படுக்கை, ஆக்சிஜன் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. படுத்த படுக்கையாக உள்ள விஜயகாந்திற்கு, வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், விஜயகாந்தின் உடல்நிலை குறித்து, அவரது மனைவி பிரேமலதா கூறுகையில், ''விஜயகாந்த் உடல் நிலையில் சற்று தொய்வு ஏற்பட்டு உள்ளது.

அவ்வப்போது, மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சை அளிக்க வேண்டியுள்ளது. அவர் பழைய நிலைக்கு திரும்புவார். அவரது உடல்நிலை பற்றி பேசி பெரிதாக்க வேண்டாம்; எங்கள் நிலையை புரிந்து கொள்ளுங்கள்,'' என்றார். விஜயகாந்த் உடல்நிலையில் சற்று தொய்வு என்ற தகவல், அவரது ரசிகர்கள், கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விஜயகாந்தை பார்க்க, விரும்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு தினமும் தொண்டர்கள் வருகின்றனர். அவரை பார்க்க அனுமதி அளிக்காததால், ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X