சென்னை: ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை சரி செய்யக்கோரி, இன்று முதல், 24ம் தேதி வரை, முதல்வரின் தனிப்பிரிவுக்கு புகார் அனுப்பும் போராட்டத்தை, ஆசிரியர் சங்கம் அறிவித்துள்ளது.
அதனால், இன்று முதல் வரும், 24ம் தேதி வரை, 'உங்கள் தொகுதியில் முதல்வர்' என்ற தனிப்பிரிவுக்கு, 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் சார்பில், இ- - மெயில் வழியே, ஒற்றை கோரிக்கையுடன் மனுக்கள் அனுப்பப்பட உள்ளன.தமிழக முதல்வர், அமைச்சர்கள் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கோரிக்கைகளை எடுத்து செல்லும் வகையில், அடுத்த மாதம் சென்னையில் மாநாடும் நடத்தப்படும். காலாண்டு விடுமுறையில் செப்டம்பரில், 48 மணி நேர அடையாள உண்ணாவிரதம் நடத்தப்படும். அதற்கு பிறகும் கோரிக்கை ஏற்கப்படாவிட்டால், காலவரையற்ற போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளனர்.