ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டம் ரத்தாகவில்லை: முதல்வரை சந்தித்து வலியுறுத்த முடிவு
Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (4) | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 

பொள்ளாச்சி: 'ஆழியாறு அணையில் இருந்து, ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி முதல்வரிடம் மனு கொடுத்து வலியுறுத்துவோம்,' என, ஆலோசனை கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.



latest tamil news



பொள்ளாச்சி, ஆழியாறு அணையில் இருந்து ஒட்டன்சத்திரத்துக்கு குடிநீர் கொண்டு செல்லும் திட்டத்துக்கு அரசாணை வெளியிடப்பட்டு, டெண்டர் விடப்பட்டது. இத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, பி.ஏ.பி., விவசாயிகள் போராடி வருகின்றனர். இந்நிலையில் கடந்த, 27ம் தேதி பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பாதுகாப்பு கூட்டமைப்பு சார்பில், கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது.

இத்தகவல் அரசுக்கு தெரிந்ததால், நகராட்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சர்கள் தலைமையில், கூட்டமைப்பினரிடம் கடந்த, 1ம் தேதி பேச்சு நடத்த அழைப்பு விடுத்தனர்.இதையடுத்து, போராட்டம் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது. கடந்த, 1ம் தேதி அமைச்சர்கள் தலைமையில் நடந்த கூட்டத்தில், 'பி.ஏ.பி., விவசாயிகள் சம்மதம் இல்லாமல் இத்திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம்,' என தெரிவித்ததாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.

இந்நிலையில், கூட்டமைப்பினர் கூட்டம் நேற்று, தொழில்வர்த்தக சபை கூட்ட அரங்கில் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் தலைமை வகித்தார். தொழில்வர்த்தக சபை தலைவர் கோபாலகிருஷ்ணன், திருமூர்த்தி நீர்தேக்க திட்டக்குழு தலைவர் பரமசிவம், புதிய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் சங்க செயலாளர் செந்தில், பழைய ஆயக்கட்டு பாசன விவசாயிகள் நல சங்க செயலாளர் வித்யாசாகர் மற்றும் விவசாயிகள் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில், ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்தை ரத்து செய்ய என்ன செய்யலாம் என ஆலோசிக்கப்பட்டது.






ஒருங்கிணைப்பாளர் நித்தியானந்தம் கூறியதாவது: அமைச்சர்கள் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், ஒட்டன்சத்திரத்துக்கு தண்ணீர் கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தினால், பொள்ளாச்சி மக்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்து விரிவாக விளக்கப்பட்டது.பிரச்னைகளை கேட்டறிந்தவர்கள், பொள்ளாச்சி மக்களை பாதிக்க வைத்து இத்திட்டம் நிறைவேற்ற மாட்டோம் என தெரிவித்துள்ளனர். அடுத்த கட்டமாக திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.

வரும், 15ம் தேதி பொள்ளாச்சி வரும் முதல்வரை, விவசாயிகள் கூட்டமைப்பினர் சந்தித்து மனு கொடுத்து, திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தலாம் என முடிவு செய்யப்பட்டது.முதல்வரிடம் நேரம் கேட்டு, இத்திட்டத்தால் என்ன பிரச்னை ஏற்படும் என விரிவாக விளக்கலாம். தமிழக அரசு, பொள்ளாச்சி விவசாயிகள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
திண்டுக்கல் சரவணன் - ஓசூர்,இந்தியா
04-ஜூலை-202217:48:02 IST Report Abuse
திண்டுக்கல் சரவணன் கர்நாடக மாநிலத்தவர், தமிழகத்துக்கு தண்ணீர் தர எதிர்ப்பு தெரிவிப்பதை இப்போது புரிந்துகொள்ள முடிகிறது. சுயநலமே பெரிது. மேலும் உடுமலை பழனி தாண்டி தண்ணீர் எடுத்து வருவதையும் புரிந்துகொள்ள முடியவில்லை. தமிழகம் முழுக்கவே, ஆங்காங்கே பேயும் மலைத்தண்ணீரை தேக்கி, அதன் இயற்க்கை போக்கை ஆணை -தடுப்பணை-கதவனை என்ற பெயரில் தடுத்து அடுத்த ஊர் கருகுவதை தமிழகம் முழுக்க பார்க்கிறோம்.
Rate this:
Cancel
CBE CTZN - Coimbatore,இந்தியா
04-ஜூலை-202213:35:43 IST Report Abuse
CBE CTZN குடி நீர் தான் முக்கியம். விவசாயம் கால்நடைகள் ஆகியவற்றிக்கு பெரும்பாலும் உள்ளூர் நீர் கட்டமைப்புகளை பலப்படுத்தி அதிலிருந்து பயன்படுத்தவேண்டும்.. உங்கள் ஊரில் உள்ள குளம் குட்டை ஏறி கிணறுகளை தூர்வாரி பயன்படுத்துங்கள், அதுபோக தேவைக்கு ஏற்ப அணை நீரை பயன்படுத்துங்கள் ... நொய்யல் பவானி ஆறுகள் மிகவும் மாசடைந்து வருகின்றது, இதை தடுக்க நடவடிக்கை தேவை
Rate this:
Cancel
மணி - புதுகை,இந்தியா
04-ஜூலை-202207:47:55 IST Report Abuse
மணி விவசாயிகள் என்ற போர்வையில் செயல்படும் நக்ஸலைட்டுகளை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவேண்டும்.
Rate this:
கோபாலகிருஷ்ணன்_பொள்ளாச்சிமிஸ்டர் மணி சார் புதுகையில் இருந்துவிட்டு இங்கே என்ன நிலவரம் என்று தெரியாமல் கருத்து பதிவிட வேன்டாம்.. ஒட்டன்சத்திரம் குடிநீர் திட்டத்திற்கு அதன் அருகாமயிலேயே பல இடங்களில் இருந்து தண்ணீர் பெறலாம் ஆனால் இவ்வளவு தூரம் கடந்து இதை நடைமுறை படுத்த வேண்டிய தேவை என்ன மேலும் இங்குள்ள விவசாயம் என்ன ஆகும் ஏற்கனவே பல குடிநீர் திட்டங்கள் அனையை நம்பி உள்ளது அதற்கே சரியான முறையில் குடிநீர் வினியோகிக்கப்படவில்லை வாரம் ஒரு முறை தான் குடிநீர் விநியோகம் உள்ளது...பாசன விவசாயிகள் உங்களுக்கு நக்சலைட் போன்று தெரிந்தால் அது உங்கள் அறியாமை..இந்த திட்டம் செயல்படுத்தினால் வயல்கள் அனைத்தும் பிளாட் போட்டு விற்பனை ஆகும் என்பது மட்டும் உறுதி......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X