பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு | தேனி செய்திகள் | Dinamalar
பெரியாறு அணைக்கு நீர் வரத்து அதிகரிப்பு
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 



கூடலுார் : நீர்ப் பிடிப்பு பகுதியில் பெய்த மழையால், முல்லைப்பெரியாறு அணைக்கு நீர் வரத்து வினாடிக்கு, 799 கன அடியாக அதிகரித்தது.



நேற்று காலை 8:00 மணி நிலவரப்படி நீர்ப் பிடிப்பு பகுதியான தேக்கடியில் 28.2; பெரியாறில் 29.6 மி.மீ., மழை பதிவானது.இதனால் அணைக்கு வினாடிக்கு 519 கன அடியாக இருந்த நீர் வரத்து 799 கன அடியாக அதிகரித்தது. நீர் இருப்பு 4,212 மில்லியன் கன அடியாகும்.தமிழக பகுதிக்கு குடிநீர், சாகுபடிக்காக ஆயிரம் கன அடி திறந்து விடப்பட்டுள்ளது. நீர்மட்டம் 127.75 அடியாக இருந்தது.

அணையின் மொத்த உயரம் 152 அடி. நேற்று பகல் முழுதும் மேகமூட்டத்துடன் அவ்வப்போது மழை பெய்தது.தமிழகப் பகுதிக்கு திறக்கப்பட்டுள்ள தண்ணீர் மூலம் 'லோயர் கேம்ப்' பெரியாறு நீர் மின் நிலையத்தில் மூன்று ஜெனரேட்டர்களில், 90 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படுகிறது.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் மதுரை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X