வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகள் தாக்கு பிடிக்காது: பிரதமர் மோடி
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
Latest district News

ஹைதராபாத்: ''வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகளைப் பார்த்து, மக்கள் வெறுப்படைந்து உள்ளனர். இதுபோன்ற கட்சிகளால் அரசியலில் நீண்ட காலம் தாக்குபிடிக்க முடியாது,'' என, பிரதமர் மோடி கூறினார்.



தெலுங்கானா மாநிலம் ஹைதராபாதில் பா.ஜ., தேசிய செயற்குழு கூட்டம் கடந்த இரண்டு நாட்களாக நடந்தது.கூட்டத்தில் பிரதமர் மோடி நேற்று பேசியதாவது:வாரிசு அரசியல், வாரிசு அரசியல் கட்சிகள் ஆகியவற்றை பார்த்து நம் நாட்டு மக்கள் வெறுப்படைந்து உள்ளனர்.

வாரிசு அரசியலை ஊக்குவிக்கும் கட்சிகளால், அரசியலில் நீண்ட காலம் தாக்குப் பிடிக்க முடியாது.நாட்டுக்கும், மக்களுக்கும் சேவை செய்வதுதான் நம் முதல் கடமை. பாக்யா நகரான ஹைதராபாத், நமக்கு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

நட்பு யாத்திரை
பல சமஸ்தானங்கள், பிராந்தியங்களை ஒன்றிணைத்து, ஒரே பாரதத்துக்கு அடித்தளமிட்டவர் சர்தார் படேல். ஒரே பாரதத்தை சிறந்த பாரதமாக மாற்றுவது தான் நம்லட்சியம்.நாட்டில் பல ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சிகள், இப்போது சரிவை சந்தித்து வருகின்றன. நாம் அவர்களை பார்த்து கேலி செய்யக் கூடாது.
அவர்கள் செய்த தவறுகளில் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.பா.ஜ.,விடம் ஜனநாயக சான்றுகளை கேட்கும் எதிர்க்கட்சிகள், தங்கள் கட்சியில் ஜனநாயகம் உள்ளதா என்பதை முதலில் தெரிவிக்கட்டும்.தாஜா செய்யும் அரசியலை கைவிட்டு, அனைவருக்குமான அரசியலை நாம் மேற்கொண்டு உள்ளோம். சமூகத்தில் அனைத்து தரப்பு மக்ளிடமும் கட்சியை கொண்டு செல்ல, தொண்டர்கள் 'நட்பு யாத்திரை' மேற்கொள்ள வேண்டும்.அனைவருக்குமான அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது.

நல திட்டங்களை செயல்படுத்துவதில், நாம் எந்த பாரபட்சமும் காட்டுவதில்லை.நாட்டில் ௨௦௦ கோடிக்கும் அதிகமாக கொரோனா தடுப்பூசி, 'டோஸ்' இலவசமாக போடப்பட்டுஉள்ளது.மத்தியிலும், மாநிலத்திலும் உள்ள பா.ஜ., அரசுகள், பெண்கள் முன்னேற்றத்துக்காக பல நடவடிக்கைகள் எடுத்துள்ளன. அதனால் தான் கடந்த எட்டு ஆண்டுகளில் நடந்த அனைத்து தேர்தல்களிலும், பா.ஜ.,வுக்கான பெண்கள் ஆதரவுஅதிகரித்துள்ளது.

வாழ்க்கை எளிமையானது
மிகவும் எளிமையான குடும்பத்தில் இருந்து வந்தவர், நம் ஜனாதிபதி வேட்பாளர் திரவுபதி முர்மு. நாட்டின் உயர் பதவியில் அவரை அமர வைக்க வேண்டியது நம் கடமை.இவ்வாறு பிரதமர்பேசினார்.இதன்பின் ஹைதராபாதில் நடந்த பா.ஜ.,வின் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் பேசியதாவது:மத்தியில் தே.ஜ., கூட்டணி அரசு அமைந்த எட்டு ஆண்டுகளில், அனைத்து மக்களின் வாழ்விலும், நல்ல மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சாதாரண மக்களின் வாழ்க்கை எளிமையாக்கப்பட்டுள்ளது.நாட்டின் வளர்ச்சியின் பலனை, அனைத்து மக்களும், அனைத்து பகுதிகளும் அனுபவிக்கவேண்டும்.தெலுங்கானா மாநிலம் வளர்ச்சிப் பாதையில் வேகமாக செல்ல வேண்டும். அதற்கு இரட்டை இன்ஜின் அரசுகள், அதாவது மத்தியில் மட்டுமின்றி, மாநிலத்திலும் பா.ஜ., ஆட்சி அமைய வேண்டும்.இவ்வாறு பிரதமர்பேசினார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Upload Photo
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X