'பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு நீர்த்துப்போனது' | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
'பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீடு நீர்த்துப்போனது'
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

அன்னுார்: ''பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் நீர்த்துப் போக செய்துவிட்டன'' என பிற்படுத்தப்பட்ட சமுதாயத்தினர் உரிமைக்கான கூட்டமைப்பு தலைவர் தெரிவித்துள்ளார்.



இக்கூட்டமைப்பின் தலைவர் ரத்தின சபாபதி, அன்னுாரில் நிருபர்களிடம் நேற்று கூறியதாவது: 1985 முதல் 2022ம் ஆண்டு வரை தமிழகத்தை ஆண்ட கட்சிகள் பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீட்டை நீர்த்து போகச் செய்து விட்டன. ஈழுவா, தீயா, மதம் மாறியோர், என பல்வேறு சமுதாயங்களை பிற்படுத்தப்பட்டோருக்கான ஒதுக்கீட்டில் சேர்த்து விட்டனர்.

ஒதுக்கீட்டை 50 சதவீதத்திலிருந்து 26.5 சதவீதமாக குறைத்துவிட்டன. எந்த சமுதாயம் பின்தங்கியுள்ளதோ அந்த சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு வழங்கப்பட வேண்டும். மத்திய அரசில் இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்காக, 27 சதவீத ஒதுக்கீடு அறிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகபட்சமாக, 17 சதவீத ஒதுக்கீடு மட்டுமே தரப்படுகிறது.

இதற்கு தீர்வு காண மதுரையில் ஆக., 7ல் கோரிக்கை மாநில மாநாடு நடத்த உள்ளோம். எங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காவிட்டால் போராட்டம் நடத்துவோம். நீதிமன்றத்தை அணுகி ஒதுக்கீடு பெற நடவடிக்கை எடுத்து வருகிறோம். இவ்வாறு, அவர் தெரிவித்தார்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X