தரம் உயரும் பள்ளிகளும் கவுன்சிலிங்கில் சேர்ப்பு? | சென்னை செய்திகள் | Dinamalar
தரம் உயரும் பள்ளிகளும் கவுன்சிலிங்கில் சேர்ப்பு?
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

சென்னை: அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கவுன்சிலிங்கில், புதிதாக தரம் உயர்த்தப்படும், 164 பள்ளிகளையும் சேர்க்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. தமிழக பள்ளிக்கல்வி துறையில் பணியாற்றும் முதுநிலை ஆசிரியர்களில், தகுதி வாய்ந்தோருக்கு, தலைமை ஆசிரியராக பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது.



இதற்கான கவுன்சிலிங் அடுத்த வாரம் நடக்கிறது. தலைமை ஆசிரியர், முதுநிலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பதவி உயர்வு வழங்கப்பட உள்ளது. இந்நிலையில், இந்த ஆண்டு நடத்தப்பட்ட ஆன்லைன் கவுன்சிலிங்கின் போது, தலைமை ஆசிரியர்களாக பதவி உயர்வு பெற்றவர்களுக்கு, இந்த முறை நடக்கும் கவுன்சிலிங்கில் பங்கேற்க தகுதி இல்லை என்று, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், தரம் உயர்த்தப்பட உள்ள, 164 உயர்நிலை மற்றும் மேல்நிலை பள்ளிகளின் இடங்களையும், தற்போதைய ஆசிரியர் பதவி உயர்வு கவுன்சிலிங்கில் சேர்க்க வேண்டும் என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X