ஊதிய ஒப்பந்தம் தாமதம் அதிகாரிகள் மீது புகார் | கோயம்புத்தூர் செய்திகள் | Dinamalar
ஊதிய ஒப்பந்தம் தாமதம் அதிகாரிகள் மீது புகார்
Added : ஜூலை 04, 2022 | |
Advertisement
 

சென்னை: 'அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, ஊதிய ஒப்பந்தம் தாமதத்துக்கு அதிகாரிகளே காரணம்' என, தொ.மு.க., உள்ளிட்ட தொழிற்சங்க கூட்டுக்குழு குற்றம் சாட்டி உள்ளது.



அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான, 13வது ஊதிய ஒப்பந்தம் முடிந்து, மூன்று ஆண்டுகளாகி விட்டது. தற்போது, 15வது ஊதிய ஒப்பந்த பேச்சு தொடங்கி இருக்க வேண்டும். ஆனால், இதுவரை, 14வது ஊதிய ஒப்பந்தம் குறித்தே முடிவு எட்டப்படவில்லை.இதுகுறித்து, தொ.மு.ச., -- சி.ஐ.டி.யு., -- ஏ.ஐ.டி.யு.சி., -- எச்.எம்.எஸ்., உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் ஆலோசனை கூட்டம், நேற்று முன்தினம் நடந்தது.

இதையடுத்து, கூட்டுக்குழு வெளியிட்டுள்ள அறிக்கை:கடந்த, 13வது ஊதிய ஒப்பந்தத்தில், ஊழியர்கள் ஊதியம் குறைக்கப்பட்டது. மூத்தோர், இளையோர் வேறுபாடு இல்லாத நிலையும் இருந்தது. அதற்கு மாறாக, 'பே மேட்ரிக்ஸ்' முறையில் ஊதியம் நிர்ணயிக்க, தொழிற்சங்கங்கள் வலியுறுத்தின. இந்த முறையில் ஊதிய விகிதங்களைக் கணக்கிடாமல், அதிகாரிகள் தாமதப்படுத்தி வருகின்றனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து கழக ஊழியர்கள் கூறுகையில், 'போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தலைமையில், மே, 12ல் ஊதிய ஒப்பந்த பேச்சு நடந்தது. ௧௦ நாட்களில் ஒப்பந்தம் முடிவாகும் என்றனர். இப்போது, ஆளுங்கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் தொழிற்சங்கங்கள், அதிகாரிகளை கண்டிப்பது போல அறிக்கை வெளியிட்டுள்ளன. இந்த அறிக்கை எங்களை ஏமாற்றம் அடைய வைத்துள்ளது' என்றனர்.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் கோயம்புத்தூர் கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X