வாகனங்கள் நிறுத்தும் இடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது: தவிக்கும் காஞ்சிபுரம் | காஞ்சிபுரம் செய்திகள் | Dinamalar
வாகனங்கள் நிறுத்தும் இடம் பயன்பாட்டிற்கு வருவது எப்போது: தவிக்கும் காஞ்சிபுரம்
Updated : ஜூலை 04, 2022 | Added : ஜூலை 04, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் நகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகிறது. வெளியூர் வாகனங்கள் நிறுத்தும் இடம் கட்டி முடிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கும் மேலாகியும், பயன்பாட்டுக்கு எப்போது வரும் என மாநகர மக்கள் எதிர்பார்க்கின்றனர்.latest tamil newsகாஞ்சிபுரத்தில் பழைமையான கோவில்கள் அதிகம் உள்ளன. வரலாற்று சிறப்பு பெற்ற கோவில்கள் மற்றும் பஞ்சபூத தலங்களில் முதல் தலமாக கருதப்படும் ஏகாம்பரநாதர் கோவில், காஞ்சி காமாட்சி அம்மன், வரதராஜப்பெருமாள் ஆகிய கோவில்கள் உள்ளன.

மேலும் தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள கைலாசநாதர் கோவில், வைகுண்ட பெருமாள் கோவில்களில் உள்ள சிற்பங்களை பார்ப்பதற்கு வெளிநாட்டு சுற்றுலா பயணியர் அதிகம் வருகின்றனர்.அனைத்து கோவில்களுக்கும் தினமும் வெளியூர் பக்தர்கள் நுாற்றுக்கணக்கான கார், வேன்களில் அதிகம் வருகின்றனர்.

காஞ்சிபுரம் கோவிலுக்கு வரும் யாத்ரீகர்கள் வருகையை மேலும் அதிகரிக்கும் வகையில் பாரம்பரிய நகர வளர்ச்சி மேம்பாட்டு திட்டத்தில் பல கோடி ரூபாய் மதிப்பில் பணிகள் நடந்தன. கோவிலுக்கு வரும் பக்தர்கள் தங்குவதற்காக விடுதிகள் கட்டப்பட்டன.
அதில் ஒரு பகுதியாக சுற்றுலா வளர்ச்சி துறை சார்பில், வெளியூரில் இருந்து கோவிலுக்கு செல்லும் பக்தர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்காக காஞ்சிபுரம் ஒலிமுகமதுபேட்டை பகுதியில் வாகனங்கள் நிறுத்தும் இடம் கட்டப்பட்டது. கடந்த 2017ல் பணி துவங்கப்பட்டு இரண்டு ஆண்டுகளில் பணி முடிந்து விட்டது. நாளுக்கு நாள் வாகனங்கள் அதிகரித்து வருவதால், நகரில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியாத நிலை உள்ளது.

நகருக்குள் செல்லும் வாகனங்கள் குறைந்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசலை தவிர்க்க முடியும். அதற்கு நகர் பகுதியில் கட்டி முடிக்கப்பட்ட வாகன நிறுத்தம் இடம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும்.பேருந்து நிலையம் நகருக்கு வெளியில் செல்ல வேண்டும். இந்த திட்டம் நடைமுறைப்படுத்தினால் எதிர்காலத்தில் நகர் பகுதியில் மக்கள் சாலையை எளிதில் கடக்க முடியும். அந்த அளவுக்கு வாகனங்கள் அதிகரிப்பால் சிரமபட வேண்டிஇருக்கும் என நகர மக்கள் ஆதங்கப்படுகின்றனர்.


யார் பராமரிப்பதுவாகனங்கள் நிறுத்தும் இடம் கட்டி முடிக்கப்பட்டு இன்னும் பயன்பாட்டுக்கு வரவில்லை. காஞ்சிபுரம் நகர் பகுதியில் வழக்கம் போல் போக்கு வரத்து நெரிசல் ஏற்படுகிறது. பக்தர்கள் கோவிலுக்கு செல்லும் வாகனங்கள் அந்தந்த கோவில் வளாகத்தில் நிறுத்துவதற்கு இட வசதி இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
ஒலிமுகமதுபேட்டை பகுதியில், வெளியூர் வாகனங்கள் நிறுத்தினால் கோவில் பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கலாம். அந்த இடத்தில் 250 வாகனங்கள் நிறுத்தலாம்.அங்கு நிறுத்தப்படும் வாகனங்களை பராமரிக்கும் பொறுப்பை யார் செய்வது, என்ற கேள்வி எழுந்துள்ளது. அறநிலையத்துறையா அல்லது சுற்றுலா வளர்ச்சி துறையா என முடிவுக்கு வராமல் கிடப்பில் உள்ளது.
காஞ்சிபுரம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட வாகனங்கள் விபரம்:
ஆண்டு பதிவு2017 -18 17,0212018 -19 18,3782019 -20 16,9832020 -21 12,9192021 222 12,912 (31.3.22) மொத்தம் 78,213.

 

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
மேலும் சென்னை கோட்டம்  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X